பாடல் 4
அல்லல் என் செயும் அருவினை என் செயும்
தொல்லை வல்வினை தொந்தம் தான் என் செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு
எல்லை இல்லதோர் அடிமை பூண்டேனுக்கே

விளக்கம்

அல்லல் = ஆகாமிய வினை, பழைய வினைகளை அனுபவிக்கும்போது நாம் செய்யும் செயல்களால் நாம் பெருக்கிக்கொள்ளும் வினைகள். அருவினை = அனுபவித்தால் அல்லது தீராத வினை. வேறு எவராலும் தீர்க்கமுடியாது எனபதால் அருவினை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்லை வல்வினை = பழமையான சஞ்சித வினை. நம்மை மாயத் தோற்றத்தில் ஆழ்த்தும் வலிமை கொண்டமையால் வல்வினை என்று கூறப்பட்டுள்ளது.

எல்லா உயிர்களும் இதற்கு முன்னர் எடுத்த பிறவிகளில் செய்த செயல்களின் காரணமாக, வினைகளுடன் இருக்கின்றன. அந்த வினைகளை, உயிர் தானே தனியாக கழிக்க முடியாது. ஏதாவது ஒரு உடலுடன் சேர்ந்தாலன்றி, அந்த உடலில் உள்ள கருவிகள் மூலம் இன்ப துன்பங்களை நுகர்ந்துதான் வினைகளை கழிக்க முடியும். நற்செயல்கள், புண்ணியங்களை ஈட்டி, இன்பத்திற்கு அடிகோலுகின்றன. தீய செயல்கள் பாவங்களை ஈட்டி துன்பங்களுக்கு காரணமாகின்றன. அறம் (புண்ணியம்) - மறம் (பாவம்), நல்வினை - தீவினை; இன்பம் - துன்பம், இவை கலந்தே வருகின்றன. இவைகள் பிரிக்க முடியாத இரட்டைகள். வடமொழியில் இரட்டைகள் என்ற பொருள்பட, த்வந்தம் என்று வடமொழியில் கூறுவார்கள். இந்த வடமொழிச் சொல் தொந்தம் என்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இருவேறு இயல்பு கொண்ட வினைகள் நம்மை ஆட்கொண்டுள்ள தன்மையை, மணிவாசகர் சிவபுராணத்தில், அறம் பாவம் என்ற அருங்கயிற்றால் கட்டி, புறந்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோறும் ஒன்பது வாயில் குடில் என்று, நமது உடலினை குறிப்பிடுகின்றார்.

த்வந்தம் என்ற சொல் துவந்தம் என்று திருவாசகம், குலாப்பத்து பதிகத்தில் கையாளப் பட்டுள்ளதை நாம்ம கீழ்க்கண்ட பாடலில் காணலாம்.

என்பு உள் உருக்கி இருவினையை ஈடழித்துத்
துன்பம் களைந்து துவந்தங்கள் தூய்மை செய்து
முன்பு உள்ளவற்றை முழுதழிய உள் புகுந்த
அன்பின் குலாத் தில்லை ஆண்டானைக் கொண்டன்றே

சிவபிரானுக்கு அடிமையாக நாம் மாறிவிட்டால், நம்மை வினைகள் எவ்வாறு தொல்லை செய்யமுடியும் என்று அப்பர் பிரான் இங்கே கேள்வி கேட்பதைப் போல் காரைக்கால் அம்மையாரும், தனது அற்புதத் திருவந்தாதியின் 87ஆவது பாடலில் ஒரு கேள்வியினை எழுப்புகின்றார். வேறு எவரது பேச்சையும் கேளாமல், நமது அறிவினைப் பின்பற்றி, சிவபிரானுக்கு பாமாலை சூடியும் அவரது திருவடிகளுக்கு பூமாலைகள் சூடியும் வழிபட்டால், இருளாகிய கொடிய வினைகள் நம்மை எவ்வாறு பற்றும் என்பதே அந்த கேள்வி. எற்று = எப்படி, எவ்வாறு. அடுதல் = வருத்துதல்.

நாமாலை சூடியும் நம் ஈசன் பொன்னடிக்கே
பூமாலை கொண்டு புனைந்து அன்பாய் -- நாமோர்
அறிவினையே பற்றினால் எற்று ஏது அடுமே
எறிவினையே என்னும் இருள்.

பொழிப்புரை

தில்லை மாநகரத்தில் உறையும் சிற்றம்பலவனார்க்கு, எல்லையில்லாத அடிமையாக மாறிய என்னை, நீக்குதற்கு அரியது என்று மற்றவர்களால் கருதப்படும் வினைகள் ஏதும் செய்யாது; இன்ப துன்பங்களை அளிக்கும் வலிமை மிக்க சஞ்சித வினைகள் என்னை ஏதும் செய்யாது; நான் எதிர்கொள்ளப் போகும் வினைகளும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு!

சைக்கிளில் விஜய்! துரத்திய ரசிகர்கள், பாதுகாவலர்கள்!

விஜய்யின் வருகை தோ்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: சிபிஎம் எம்.ஏ.பேபி
தவெக நிர்வாகி அஜிதா திமுகவில் இணைந்தார்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு