ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

26. அன்னம் பாலிக்கும் - பாடல் 6

தேவர்களும், ஞானிகளும், சிவபிரானைத் தொழுது தங்களுக்கு வேண்டிய வரங்களைப் பெற்றுக்கொள்ளும் இடம் தில்லைச் சிற்றம்பலம்;

Updated On :27 மே 2016, 12:18 pm

பாடல் 6

சிட்டர் வானவர் சென்று வரம் கொளும்
சிட்டர் வாழ் தில்லைத் சிற்றம்பலத்து உறை
சிட்டன் சேவடி கைதொழச் செல்லும் அச்
சிட்டர் பால் அணுகான் செறு காலனே

விளக்கம்

சிட்டர் என்ற சொல் பல பொருள் பட இங்கே ஆட்கொள்ளப் பட்டுள்ளது. சித்தர் ஞானிகள் என்று ஒரு பொருள். முதன்மையானவர் என்ற பொருள் கொண்ட ச்ரேஷ்டர் என்ற வடமொழிச் சொல்லின் திரிபாக, இரண்டாவது அடியிலும் மூன்றாவது அடியிலும் வருகின்றது. மெய்ஞானிகள் என்ற பொருளில் நான்காவது அடியில் காணப்படுகின்றது.

பொழிப்புரை

தேவர்களும், ஞானிகளும், சிவபிரானைத் தொழுது தங்களுக்கு வேண்டிய வரங்களைப் பெற்றுக்கொள்ளும் இடம் தில்லைச் சிற்றம்பலம்; தங்களது பண்பினாலும் சிவபிரானுக்குச் செய்யும் தொண்டினாலும், மேலோர்களாகக் கருதப்படும் தில்லை வாழ் அந்தணர்கள் வாழும் இடம் தில்லைச் சிற்றம்பலம்; இத்தகைய சிறப்பு வாய்ந்த சிற்றம்பலத்தில், நடனம் ஆடும் சிவபிரானது திருவடிகளைத் தொழுவதற்காக செல்லும் மேன்மை பொருந்திய அடியார்களை, காலன் அணுகமாட்டான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.