சிலந்தியும் ஆனைக்காவில் திரு நிழல் பந்தர் செய்து
உலந்து அவண் இறந்தபோதே கோச்செங்கணானுமாகக்
கலந்த நீர்க் காவிரீ சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலம் தனில் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே
விளக்கம்
இந்த பாடலில் கோச்செங்கணானின் வாழ்க்கை குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவும் பெரியபுராணத்தில் கூறப்படும் நிகழ்ச்சி.
உலந்து = அழிக்கப்பட்டு இறந்தபோது. அவண் = திருவானைக்காவில். திரு = அழகிய. கலந்த நீர் என்று காவிரி நீரினை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.
திருவானைக்காவில், இறைவனின் சன்னதியில் பொங்கி வந்து இலிங்க உருவத்தில் இருக்கும் சிவபெருமானின் திருப்பாதங்களை வருடிய வண்ணம் காவிரி நதி இருப்பதால், இறைவனுடன் கலந்த நீர் என்பதை உணர்த்தும் வகையில், கலந்த நீர் என்று இங்கே குறிப்பிடுகின்றார்.
சிலந்திக்கு அருளிய செய்கை பல தேவாரப் பாடல்களில் குறிக்கப்பட்டுள்ளது. அப்பர் பெருமான் நனிபள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (4.70) இரண்டாம் பாடலில், மற்றவர்களைப் போல், பூவும் நீரும் கொண்டு வழிபட முடியாத சிலந்தி, பந்தல் அமைத்து இறைவனுக்கு திருத்தொண்டு ஆற்றியதாக கூறுகின்றார்.
யானையும் நீர் கொணர்ந்து இறைவனை நீராட்டிய தலம் அல்லவா திருவானைக்கா. அரையன் = மன்னன்.
புலர்ந்தகால் பூவும் நீரும் கொண்டு அடி போற்ற மாட்டா
வலம் செய்து வாயின் நூலால் வட்டணைப் பந்தர் செய்த
சிலந்தியை அரையனாக்கிச் சீர்மைகள் அருள வல்லார்
நலம் திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே
சுந்தரரும் தனது திருவாவடுதுறைப் பதிகத்தின் (7.66) இரண்டாவது பாடலில் இந்த நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றார். தெருண்ட = தெளிவு பெற்ற. சென்ற பிறவியின்
புண்ணியத்தால் தெளிந்த மனத்துடன் இறைவனை வழிபட்ட சிலந்தி. அரண்டு = பயந்து.
தெருண்ட வாயிடை நூல் கொண்டு சிலந்தி சித்திரப் பந்தர்
சிக்கென இயற்றச்
சுருண்ட செஞ்சடையாய் அது தன்னைச் சோழனாக்கிய
தொடர்ச்சி கண்டு அடியேன்
புரண்டு வீழ்ந்து நின் பொன்மலர்ப் பாதம் போற்றி போற்றி
என்று அன்போடு புலம்பி
அரண்டு என் மேல்வினைக்கு அஞ்சி வந்தடைந்தேன்
ஆவடுதுறை ஆதி எம்மானே
பொழிப்புரை
திருவானைக்காவில் உள்ள பெருமானுக்கு, நிழலைத் தரும் வகையிலும். சருகுகள் மற்ற குப்பைகள் விழாத வகையிலும், அழகிய பந்தல் அமைத்து சிலந்தி வழிபட்டது. சிவபெருமானின் சன்னதியில் சிலந்தி தனது எச்சில் நூலால் பந்தல் இட்டு சன்னதியின் தூய்மையை கெடுத்தது என்று நினைத்த யானையால் தாக்கப்பட்டு அழிந்தது. சிலந்தி செய்த வழிபாட்டினால் உள்ளம் மிகவும் மகிழ்ந்த சிவபிரான், அந்த சிலந்தி இறந்த பின்னர், அடுத்த பிறவியில் சோழர்களின் பட்டத்து ராணியின் மகனாகப் பிறக்குமாறு அருள்புரிந்தார். முற்பிறப்பில் சிலந்தியாக இருந்து தன்னை வழிபட்டதற்கு பலனாக கோச்செங்கண்ணான் என்ற பெயருடன் அரசாள வைத்த கருணையாளர் குறுக்கை வீரட்டத்து இறைவர் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

