செம்மலர் கமலத்தோனும் திருமுடி காண மாட்டான்
அம்மலர் பாதம் காண்பான் ஆழியான் அகழ்ந்தும் காணான்
நின்மலன் என்று அங்கு ஏத்து நினைப்பினை அருளி நாளும்
நம் மலம் அறுப்பர் போலும் நனிபள்ளி அடிகளாரே
விளக்கம்
அகழ்தல் = நிலத்தைத் தோண்டிச் செல்லுதல். நின்மலன் = மலங்கள் அணுகமுடியாத தன்மையை உடையவன். சிவபெருமான் இயல்பாகவே மலங்களை களைந்தவன். ஆணவம், கன்மம், மாயை எனப்படும் மலங்களில் கட்டுண்டு கிடக்கும் நாம், அந்த மலங்களின் பிடியிலிருந்து விடுபட்டால்தான், இறைவனைச் சென்று அடைய முடியும். மலங்களால் அணுக முடியாத ஒருவன் தானே, மலங்களைக் களைய நமக்கு உதவ முடியும். எனவே தான் நின்மலன் என்று சிவபிரானை குறிப்பிட்டு, அவனை வணங்கினால் நாம் பயன் அடைய முடியும் என்பதை அப்பர் பிரான் இங்கே நமக்கு உணர்த்துகின்றார்.
பொழிப்புரை
செம்மை நிறம் வாய்ந்த தாமரை மலர் மீது உறையும் பிரமனால், சிவபெருமானின் திருமுடியைக் காண இயலவில்லை. சிவபெருமானது மலர்ப் பாதங்களை காண்பதற்காக, சக்கரத்தை கையில் ஏந்திய திருமால், பன்றி வடிவம் எடுத்து நிலத்தைக் கீறிக்கொண்டு பாதாளம் வரை சென்றும், காணமுடியவில்லை. சிவபெருமான், இயல்பாகவே மலங்களைக் களைந்தவன் என்ற நினைப்பினை நமது மனதினில் ஏற்படுத்தி, அந்த நினைவால் தன்னைத் தொழச் செய்து, நம்மை மலங்களின் பிடியிலிருந்து விடுவிக்கும் திறமை வாய்ந்தவர், அவர் தான் நனிபள்ளி தலத்தில் உறையும் பெருமான் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

