பாடல் 8
அரிபிரமர் தொழுது ஏதும் அத்தன் தன்னை அந்தகனுக்கு
அந்தகனை அளக்கலாகா
எரிபுரியும் இலிங்க புராணத்துளானை எண்ணாகிப்
பண்ணார் எழுத்துளானை
திரிபுரம் செற்று ஒரு மூவர்க்கு அருள் செய்தானைச்
சிலந்திக்கும் அரசளித்த செல்வன் தன்னை
நரிவிரவு காட்டகத்தில் ஆடலானை நாரையூர் நன்னகரில்
கண்டேன் நானே
விளக்கம்
இலிங்க புராணம் என்பது பதினெண் புராணங்களில் ஒன்று. இந்த புராணத்தில் சிவபெருமானின் மகிமையை உணர்த்தும் நிகழ்ச்சிகள் சொல்லப்பட்டுள்ளன. திருமாலும்
பிரமனும் அடிமுடி காண முடியாத வகையில் நின்றது, தாருகாவனத்து நிகழ்ச்சிகள், திரிபுரத்து அரக்கர்களுடன் போர் புரிந்தது, தக்க யாகம் தொடர்பான நிகழ்சிகள், பார்வதி
கல்யாணம், ஜலந்தரன் வதம், அந்தகன் வதம், உபமன்யு முனிவருக்கு அருள் புரிந்தது, திருமால் தனது கண்ணினை மலராக அர்ச்சித்தது, திருமால் அருளிய சிவசகஸ்ரநாம
தோத்திரம், குழந்தை உபமன்யுக்கு பாற்கடல் அருளியது, துருவனின் வரலாறு, வராகத்தின் கொம்பினை ஒடித்தது, சரபர் தோற்றம், ஆகியவை இந்த புராணத்தில்வரிக்கப்பட்டுள்ளன. இயமனுக்கு அந்தகன் என்ற பெயரும் உண்டு. தான் பறிக்கவேண்டிய உயிரின் தன்மையை, எந்த நிலையில் உள்ளார், எப்படிப்பட்டவர் என்பதை
நோக்காமல், குருடனைப் போன்று உயிர் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படுவதால் அந்தகன் என்று இயமன் அழைக்கப் படுகின்றான். அந்த இயமனுக்கும் இயமனாக
செயல்பட்டு பெருமான் முடிவைத் தேடித் தந்தமை, இங்கே அந்தகனுக்கு அந்தகன் என்ற தொடரால் குறிக்கப் படுகின்றது என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது.
இந்த பாடலில் திரிபுரத்தில் வாழ்ந்து வந்த மூன்று அரக்கர்களுக்கு சிவபெருமான் அருள் புரிந்த நிகழ்ச்சி குறிப்பிடப்படுகின்றது. இந்த நிகழ்ச்சி பல திருமுறைப் பாடல்களில்
கூறப்படுகின்றது. சுதன்மன், சுசீலன், சுபுத்தி என்ற மூன்று அரக்கர்கள் திரிபுரத்து நகரங்களில் வாழ்ந்து வந்தவர்கள். திருமாலும் நாரதரும் சேர்ந்து செய்து சூழ்ச்சியால்.
தங்களது மனம் பேதலித்து, திருபுரத்து அரக்கர்கள் அனைவரும் வேத நெறியையும், சிவ நெறியையும் கைவிட்ட பின்னரும், சுதன்மன் முதலான மூவரும், சிவபிரானையே
தொடந்து வழிபட்டு வந்தார்கள். அதனால் அவர்கள் மூவரின் மீது கருணை கொண்ட சிவபெருமான், மூன்று கோட்டைகள அழிந்த போதும் இவர்கள் மூவரும் அழியாமல்
காப்பாற்றினார் என்று இலிங்க புராணம் குறிப்பிடுகின்றது. இவர்கள் மூவரையும் அழியாமல் காப்பாற்றிய கருணைச் செயல், மணிவாசகரின் திருவாசகம் திருவுந்தியார்
பதிகத்திலும் குறிப்பிடப்படுகின்றது.
உய்ய வல்லார் ஒரு மூவரைக் காவல் கொண்டு
எய்ய வல்லானுக்கே உந்தீ பற
இளமுலை பங்கன் என்று உந்தீ பற
இந்த செய்தி ஞானசம்பந்தர் அருளிய திருவண்ணாமலை பதிகத்தின் முதல் பாடலிலும் (1.69.1) காணப்படுகின்றது. தொறு = ஆடுகள். நிரை = மந்தை. ஆமாம் பிணை =
காட்டுப் பசுக்கள். தன்னைத் தொழும் அடியார்களுக்கு அருள் புரியும் சிவபெருமானை, அவனது அடியார்கள் பூக்களைக் கொண்டு தொழுவதாகவும், தேவர்கள் அவனைப்
புகழ்வதாகவும் இங்கே கூறுகின்றார். மழைக்கு, மலையின் அடிவாராத்தில் பதுங்கும் ஆட்டு மந்தைகள் மற்றும் பசுக்கூட்டங்கள் என்று அண்ணாமலையின் நீர்வளம், நிலவளம் இங்கே கூறப்படுகின்றது.
பூவார் மலர் கொண்டு அடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள்
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார்
தூமா மழை நின்று அதிர வெருவி தொறுவின் நிரையோடும்
ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே
திரிபுரத்து அடியார்கள் மூவருக்கும் அருள் புரிந்த செய்தி சுந்தரரின் திருப்புன்கூர் பதிகத்தின் ஒரு பாடலில் (7.55.8) சொல்லப்படுகின்றது. சுதன்மன் சுசீலன் ஆகிய
இருவருக்கும் வாயில் காப்பாளராக இருக்கும் தன்மையும் சுபுத்தி மத்தளம் வாசிப்பவராகவும் இருக்கும் தன்மையும், அவர்களது பக்திக்கு பரிசாக அளிக்கப்பட்ட செய்தி காணப்படும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
மூவெயில் சேற்ற ஞான்று உய்ந்த மூவரில் இருவர் நின்
திருக்கோயில் வாய்தல்
காவலாளர் என்று ஏவிய பின்னை ஒருவன் நீ கரி காடு அரங்காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ மணிமுழா முழக்க அருள் செய்த
தேவதேவ நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருப்புன்கூர் உளானே
தனது சிரிப்பினால் மும்மதில்களும் வெந்து அழியுமாறு செய்த சிவபெருமான், தன்னை வணங்கிப் போற்றி வந்த மூவரும் மகிழுமாறு, அவர்கள் தன் பக்கத்தில்
இருக்குமாறு அருள் செய்தான் என்ற தகவல் சம்பந்தர் அருளிய வேதிகுடி பதிகத்தின் (3.78) ஐந்தாவது பாடலில் காணப்படுகின்றது. உக்கு = பொடியாகி. அற = வீழ. கொக்கு
பொழில் = மாமரச் சோலைகள். வேதிகுடி தலத்தில் இருந்த மகளிர்களின் மேனி ஒளி, மாந்தளிர்களின் ஒளியினை விடவும் மிகுந்து இருந்ததாக சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.
சொக்கர் துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து தொழு மூவர் மகிழத்
தக்க அருள் பக்கம் உற வைத்த அரனார் இனிது தங்கு நகர் தான்
கொக்கரவம் உற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரி வண்டு இசை குலாம்
மிக்க அமரர் மெச்சி இனிது அச்சம் இடம் போக நல்குவேதிகுடியே
பொழிப்புரை
திருமாலும் பிரமனும் தங்களுக்குத் தந்தை என்று தொழுது ஏத்தும் பெருமான் சிவபெருமான்; திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் காணமுடியாது நின்ற நிலை போன்று சிவபெருமானின் பெருமைகள் பலவற்றைக் குறிப்பிடும் இலிங்க புராணத்து நாயகன் சிவபெருமான்; எவராலும் வெல்ல முடியாத அந்தகாசுரனுக்கு முடிவினைத் தேடித் தந்தவன் சிவபெருமான், எண்ணாகவும், எழுத்தாகவும், பண்ணாகவும் உள்ளவன் சிவபெருமான்; திரிபுரத்து கோட்டைகளை அழித்தபோது, தன்னை எப்போதும் மறவாமல் அங்கே வாழ்ந்து வந்த மூன்று அரக்கர்களுக்கு அருளியவன் சிவபெருமான்; ஆனைக்கா தலத்தில், நாவல் மரத்தின் இலைகள் சருகுகள் இலிங்க மூர்த்தத்தின் மேல் வீழாமல் தடுக்க, பந்தர் அமைத்த சிலந்தி அடுத்த பிறவியில் சோழ மன்னனாக பிறக்குமாறு அருள் புரிந்தவன் சிவபெருமான்; நரிகளுடன் மற்ற விலங்குகளும் கலந்து திரியும் சுடுகாட்டில் நடனம் புரிபவன் சிவபெருமான்; இத்தகைய பண்புகளை உடைய பெருமானை நாரையூர் நன்னகரத்தில் நான் கண்டேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார் முதல்வர் பதவி: நிதீஷ் குமார் நாளை ராஜிநாமா?

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பாகிஸ்தானுக்கு சவூதி-கத்தாா் நாடுகள் ரூ.46,550 கோடி நிதியுதவி

ஐஎஸ்எல் கால்பந்து: பஞ்சாபை வீழ்த்தியது மோகன் பகான்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

