ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

58. தளரும் கோளரவத்தொடு - பாடல் 2

பகைவர்களையும் இயல்பாகவே வெல்லவல்ல

Updated On :15 ஏப்ரல் 2017, 5:47 am

வெல வலான்    புலன் ஐந்தொடு வேதமும்
சொல வலான் சுழலும் தடுமாற்றமும்
அல வலான் மனை ஆர்ந்த மென் தோளியைக்
கல வலான் கடம்பூர் கரக் கோயிலே

விளக்கம்

அலவலான் = இயல்பாகவே நீங்கியவன்.

பொழிப்புரை


ஐந்து புலன்களையும் தனது பகைவர்களையும் இயல்பாகவே வெல்லவல்ல சிவபெருமான் வேதங்களை உலகுக்கு எடுத்து உரைக்க வல்லவன். அவன், மயக்கத்தை ஏற்படுத்தும் அறியாமையையும் தடுமாற்றத்தைத் தோற்றுவிக்கும் சந்தேகத்தையும் நமது மனங்களிலிருந்து நீக்க வல்லவன் ஆவான். தனது மனையாளாகிய, மெல்லிய தோள்களை உடைய பார்வதி அன்னையை, தனது உடலுடன் கலந்த நிலையில், உடலின் ஒரு பாகமாக ஏற்றுக்கொள்ள வல்ல அவன் விருப்பத்துடன் உறையும் இடம் கடம்பூர் கரக்கோயிலாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.