ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

58. தளரும் கோளரவத்தொடு - பாடல் 7

விண்ணுலகில் உள்ள தேவர்கள்

Updated On :15 ஏப்ரல் 2017, 5:48 am

பண்ணினார் மறை பல் பல பூசனை
மண்ணினார் செய்வது அன்றியும் வைகலும்
விண்ணினார்கள் வியக்கப் படுவன
கண்ணினார் கடம்பூர் கரக் கோயிலே
 

விளக்கம்

பண்ணினார் = பண்ணின் ஆர், பண்கள் பொருந்திய மண்ணுலகத்தில் உள்ளவர்கள் செய்யும் வழிபாடு குறித்து விண்ணுலகில் உள்ள தேவர்கள் வியப்பதாக இந்த பாடலில் அப்பர் பிரான் சொல்கின்றார். இவ்வாறு அவர் கூறுவது நமக்கு திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் கடைப் பாடலை நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் திருமாலும் பிரமனும். தாங்கள் புவனியில் பிறக்காததால், பெருமானை வழிபாட்டு உய்யும் வாய்ப்பினை இழந்ததால், தங்களது வாழ்க்கை வீணாக கழிகின்றது என்று கருதுவதாக மனிவாச்ச்சக்ர் கூறுகின்றார்.

புவனியில் போய்ப் பிறவாமையின் நாள் நாம்
 போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு என்று நோக்கி
  திருப்பெருந்துறை உறைவாய் திருமாலாம்
அவன் விருப்பு எய்தவும் அலரவன் ஆசைப் படவும் நின்
        அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்
அவனியில் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமுதே
            பள்ளி எழுந்தருளாயே

விண்ணுலகம் போகம் துய்ப்பதற்கான இடம்; அங்கே வினைகளின் பயனை அனுபவிக்க முடியுமே தவிர வினைகளை கழித்துக்கொள்ள முடியாது. தங்களது வினைகளைக் கழித்துக்கொள்வதற்கு அவர்கள் மண்ணுலகில் உள்ள தலங்களுக்கு வருவதை நாம், பல தலங்களில் மீது உள்ள தல புராணங்களில், பிரமன், திருமால், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் பெருமானை வழிபாட்டு தங்களது சாபங்களைத் தீர்த்துக்கொண்ட வரலாறு மூலம் அறிகின்றோம். தேவர்கள் தேடியும் காண்பதற்கு அரியவனாக உள்ள பெருமான், மண்ணுலகில் வாழும் நம்மைப் போன்ற உயிர்கள் உய்யும் பொருட்டு, நம்மைத் தேடிக்கொண்டு இந்த உலகம் வருவதாகவும் மணிவாசகர் இந்த பாடலில் கூறுகின்றார்.

மண்ணுலகத்தில் உள்ள அடியார்கள் இறைவனை வழிபடுவது, இம்மையில் தாங்கள் பல நலன்களும் பெறுவதுடன் மறுமையில் (அதாவது, இந்த பிறவி முடிந்தவுடன் முக்தி நிலை அடைந்து) பேரின்பம் அடையும் பொருட்டாகும். ஆனால் வானவர்கள் தாங்கள் பெற்றுள்ள போகத்தினை நிலை நிறுத்திக்கொள்ளும் பொருட்டும், தாம் மேலும் மேலும் உயர்ந்து தம்மை மற்றவர்கள் தொழும் நிலையினை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இறைவனை வழிபடுகின்றார்கள், எனவே அவர்களுக்கு, நிலவுலகத்தவர் செய்யும் வழிபாட்டின் நோக்கம் வியப்பினை அளிக்கின்றது. இந்த செய்தி மிகவும் அழகாக மணிவாசகர் திருச்சதகம் பதிகத்தில் கூறுகின்றார். மதுகரம் = வண்டு. முரலும் = இசைப் பாடல் போன்று ஒலிக்கும்.

வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின் பால்
தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழவேண்டி    
சூழ்த்து மதுகரம் முரலும் தாரோயை நாய் அடியேன்
பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னைப் பரவுவனே

பொழிப்புரை

பண்ணுடன் வேத கீதங்களை இசைத்து, பல விதமான பூசனைகளை, நிலவுலகத்தில் உள்ளவர்கள் நாள்தோறும் செய்து கடம்பூர் கரக்கொயிலில் உறையும் பெருமானை வழிபடுகின்றார்கள். விண்ணுலகத்தில் உள்ள தேவர்கள் இந்த வழிபாடுகளைக் கண்டு வியக்கின்றார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.