ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

59. ஒருவராய் இரு மூவராய் - பாடல் 3

நீர்க்குமிழி போன்று சில காலமே

Updated On :1 மே 2017, 9:27 am

இல்லக் கோலமும் இந்த இளமையும்
அல்லல் கோலம் அறுத்து உய வல்லிரே
ஒல்லைச் சென்று அடையும் கடம்பூர் நகர்ச்
செல்வக் கோயில் திருக் கரக்கோயிலே
 

விளக்கம்

சென்ற பாடலில் இறைவன் போகியாக இருந்து நம்மை இல்வாழ்க்கையில் ஈடுபடுத்துவதை உணர்த்திய அப்பர் பிரான், அந்த இல்வாழ்க்கை தரும் சிற்றின்பத்தில் மூழ்கி, நாம் இறைவனை மறந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையை இந்த பாடலில் தருகின்றார். இல்லக் கோலம் = மனை வாழக்கை ஆகிய வேடம். இல்வாழ்க்கையில் நமக்கு நாட்டம் ஏற்படுவதற்கு மூலகாரணமாக இருத்தலின், இளமைக் கோலத்தையும் அப்பர் பிரான் வெறுப்பதை நாம் இந்த பாடலில் காணலாம். இல்வாழ்க்கையில் ஈடுபடும் நமக்கு, நாளடைவில் அந்த வாழ்க்கையால் பெருகும் மக்களும் சுற்றமும் ஏற்படுத்தும் பாசக் கட்டுகளிலிருந்து விடுபடுவது எளிதில் முடியாத காரியமாக மாறிவிடுகின்றது, மேலும் மற்ற உலகப் பொருட்களின் மீது, இல்வாழ்க்கைக்குத் தேவையான செல்வம், சொத்து ஆகியவற்றின் மேல் ஆசையையும் உண்டாக்குகின்றது. இவ்வாறு நிலையில்லாத இன்பத்தில் ஆழ்ந்துவிடும் நாம், நிலையான இன்பத்தை தரும் முக்தி நிலையை நினைப்பதும் இல்லை. அதன் பயனாக தொடர்ந்து துன்பம் தரும் பிறப்பிறப்புச் சுழற்சியில் நமது ஆன்மா சிக்குண்டு வெளியே வரமுடியாமல் தவிக்கின்றது. எனவே தான் இல்லக் கோலத்தையும், இளமைக் கோலத்தையும் நமக்கு அல்லல் தரும் கோலங்கள் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

பொழிப்புரை

இல்வாழ்க்கையும், நீர்க்குமிழி போன்று சில காலமே இருந்து மறையக் கூடிய இளமைக் கோலமும், நம்மை நிலையில்லாத சிற்றின்பத்தில் ஆழ்த்தி தொடர்ந்து பிறவிச் சுழலில் நாம் சுற்றுவதற்கு காரணமாக இருக்கின்றன. எனவே நமக்கு துன்பம் தரும் கோலங்களாகிய இந்த கோலங்களுடன் நமக்குள்ளத் தொடர்பினைத் துண்டித்துக்கொண்டு உய்வினை நாடும் வல்லமை பெற்றவர்களாக நீங்கள் மாறுவீர்களாக. அவ்வாறு மாறுவதற்கு நான் உங்களுக்கு ஒரு வழி கற்றுக்கொடுக்கின்றேன். நீங்கள் மிகவும் விரைவாக, கடம்பூர் நகரில் உள்ளதும் பேரின்பமாகிய செல்வத்தைத் தரவல்லதும் ஆகிய கரக்கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவனைச் சென்று தொழுவீர்களாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.