ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

59. ஒருவராய் இரு மூவராய் - பாடல் 7

கடம்பூர் நகரத்து கரக் கோயிலாகும்

Updated On :1 மே 2017, 9:49 am

தளரும் வாளரவத்தொடு தண்மதி
வளரும் போர்ச்சடையாற்கு இடம் ஆவது
கிளரும் பேரொலி கின்னரம் பாட்டு அறாக்
களரியார் கடம்பூர்க் கரக்கோயிலே
 

விளக்கம்

தளரும் = எளிதில் வளையும் உடலினை உடைய, நெகிழும். வாளரவம் = ஒளி பொருந்திய பாம்பு. வெப்பம் மிகுந்த விடத்தினை கக்கும் பாம்புடன் குளிர்ந்த தன்மையை உடைய சந்திரனை ஒருங்கே சடையினில் வைத்து, இருவருக்கும் இடையே இருந்த பகையைத் தீர்த்து ஆண்ட பெருமானின் வல்லமை இங்கே குறிப்பிடப்படுகின்றது. இதன் மூலம் பெருமானை அடைந்தவர்கள் தங்களுக்குள்ளே இருக்கும் பகையினை மறந்து வாழ்வார்கள் என்பதும் உணர்த்தப்படுகின்றது. கின்னரம் = ஒரு வகையான நரம்பு வாத்தியம், வீணை யாழ் வகையைச் சார்ந்தது. களரியார் = காடுகள் நிறைந்த. போர்ச்சடை = உள்ளடக்கிய சடை. கிளரும் = விளங்கும், எழுப்பும்.

பொழிப்புரை

எளிதில் வளையும் உடலினைக் கொண்டு நெகிழ்ந்து செல்லும் தன்மை உடையதும், ஒளி வீசும் உடலினை உடையதும் ஆகிய பாம்பினோடு, குளிர்ந்த தன்மை உடைய பிறைச் சந்திரனை, உள்ளடக்கிய சடையை உடைய பெருமானுக்கு உரிய இடம் யாதெனில், கின்னரம் முதலான இசைக் கருவிகளைக்கொண்டு பேரொலி எழுப்பி இசைக்கப்படும் பாடல்கள் இடைவிடாது கேட்கப்படும் இடமும் காடுகள் நிறைந்த இடமும் ஆகிய கடம்பூர் நகரத்து கரக் கோயிலாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.