மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

63. மூவிலை நற்சூலம் வலன் - பாடல் 9

கஞ்சனூர் தலத்தை ஆளும்

Updated On :9 ஜூன் 2017, 6:30 pm

நெருப்புருவத் திருமேனி வெண்ணீற்றானை நினைப்பார் தம்
            நெஞ்சானை நிறைவு ஆனானைத்
    தருக்கழிய முயலகன் மேல் தாள் வைத்தானைச்
                    சலந்தரனைத் தடிந்தோனைத் தக்கோர் சிந்தை
    விருப்பவனை விதியானை வெண்ணீற்றானை விளங்கு
                ஒளியாய் மெய்யாகி மிக்கோர் போற்றும் 
    கருத்தவனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக்
            கண்ணாரக் கண்டு உய்ந்தேனே

விளக்கம்

தருக்கு = செருக்கு.

பொழிப்புரை

கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு போன்று சிவந்த திருமேனியில் வெண்ணீற்றினை பூசியவனும், தன்னை நினைக்கும் அடியார்களின் நெஞ்சினில் நிலைத்து நிற்பவனும், எங்கும் நிறைந்தவனும், தாருகவனத்து முனிவர்களால் ஏவிவிடப்பட்ட செருக்கு மிகுந்த முயலகனை அடக்கி அவனைத் தனது காலின் கீழே அழுத்தியவனும், சலந்தரனைப் பிளந்தவனும், தகுந்த ஞானம் உடைய ஞானியரின் சிந்தையில் விருப்பத்துடன் உறைபவனும், வேதங்களில் ஆகமங்களில் விதிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளாக இருப்பவனும், இயல்பாகவே மிகுந்த ஒளியுடன் திகழ்பவனும், மெய்ப்பொருளாக விளங்குபவனும், தோற்றமும் ஒடுக்கமும் கடந்த நிலையில் இருப்பதால் சான்றோர்களால் போற்றப்படும் கருத்தாக உள்ளவனும், கஞ்சனூர் தலத்தை ஆளும் இறைவனாக இருப்பவனும் ஆகிய கற்பகத்தை அடியேன் எனது கண்கள் குளிரக் கண்டு உய்வினை அடைந்தேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.