ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

61. கடலகம் ஏழினோடும் - பாடல் 3

தன்னை நினைக்காத மாந்தர்களுக்கு

Updated On :5 ஜூன் 2017, 9:57 am

எண்ணுடை இருக்குமாகி இருக்கினுள் பொருளுமாகிப்
பண்ணொடு பாடல் தன்னைப் பரவுவார் பாங்கராகிக்
கண்ணொரு நெற்றியாகிக் கருதுவார் கருதலாகாப்
பெண்ணொரு பாகம் ஆகிப் பேணும் ஆப்பாடியாரே
 

விளக்கம்

இருக்கு = ரிக் வேதம். நான்கு வேதங்களில் முதலாவதாக வைத்து எண்ணப்படும் ரிக் வேதம், நான்கு வேதங்களையும் குறிப்பிடுவதாக நாம் கொள்ள வேண்டும். எண்ணுடை = மிகவும் உயர்ந்ததாக எண்ணப்படும். பாங்கர் = அருகில் உள்ளவர். ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என்ற அப்பர் பெருமானின் வாய்மொழிக்கு ஏற்ப, இறைவன் வடமொழிப் பாடல்களாகவும், தமிழ் இன்னிசைப் பாடல்களாகவும் உள்ள நிலை இங்கே உணர்த்தப்படுகின்றது. மொழிகளுக்கு அப்பாற்பட்டவன் அல்லவா.

பொழிப்புரை

மிகவும் உயர்ந்ததாக எண்ணப்படும் இருக்கு முதலாய நான்கு வேதங்களாகவும், அந்த வேதங்களின் பொருளாகவும், பண்ணுடன் இசைத்து தன்னைப் புகழ்ந்து பாடல்கள் பாடும் அடியார்களுக்கு மிகவும் அருகில் இருக்கும் துணைவனாகவும், தனது நெற்றியில் கண்ணினை உடையவராகவும், தன்னை நினைக்காத மாந்தர்களுக்கு அவர்கள் எண்ணுதற்கும் அரியவராகத் திகழ்பவரும், பெண்ணினை தனது உடலில் ஒரு பாகத்தில் கொண்டவரும் ஆகிய இறைவன், திருவாப்பாடி தலத்தில் ஆப்பாடியராக விளங்குகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.