வண்டு சேர் பொழில் சூழ் மங்கலக்குடி
விண்ட தாதையைத் தாளற வீசிய
சண்ட நாயகனுக்கு அருள் செய்தவன்
துண்ட மாமதி சூடிய சோதியே
விளக்கம்
விண்ட = மாறுபட்ட, சிவபூஜை செய்யும் தனது கொள்கையிலிருந்து மாறுபட்ட தந்தை. தனது தந்தை பால் குடத்தை இடறும் நோக்கத்துடன் வருவதை உணர்ந்த சிறுவன் சண்டீசன், தனது அருகில் இருந்த ஒரு கொம்பினை வீசி தந்தையின் செயலைத் தடுக்க நினைத்தான். ஆனால் அந்த கொம்பு, சிவபூஜைக்கு இடையூறு செய்வோரை தண்டிக்கும் மழுப் படையாக மாறி, சண்டீசரின் தந்தையின் கால்களை வெட்டியது. இந்த செய்தியை உணர்த்தும் பெரிய புராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. செயற்கரிய செயலைச் செய்த சிறுவன் ஆர் விகுதி கொடுக்கப்பட்டு மதிப்புடன் அழைக்கப்படுவதையும், அவனது தந்தை ஒருமையில் குறிப்பிடப்படும் நயத்தையும் நாம் இந்த பாடலில் ரசிக்கலாம்.
சிந்தும் பொழுதில் அது நோக்கும் சிறுவர் இறையில்
தீயோனைத்
தந்தை எனவே அறிந்து அவன் தன் தாள்கள் சிந்தும்
தகுதியினால்
முந்தை மருங்கு கிடந்த கோல் எடுத்தார்க்கு அதுவே
முறைமையினால்
வந்து மழுவாயிட எறிந்தார் மண் மேல் வீழ்ந்தான்
மறையோனும்
பெரிய புராணம் அளிக்கும் தகவல்களின்படி, சண்டீசரின் தந்தை முதலில், பாற்குடத்தை இடறித் தள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. தனது மகன், அடுத்தவர்களுக்கு உரிமையுள்ள பாலினை பயன்படுத்துகின்றானே என்று வருந்தி, தனது கையில் இருந்த தண்டினால் அவனது முதுகில் அடித்து, அவனது செயலை தடுக்கும் நோக்கத்துடன், பல கடிய சொற்களை பேசுகின்றார். ஆனால் இறைவனை வழிபடுவதில், மனம் மொழி மெய் அனைத்தும் ஒன்றி இருந்து ஈடுபட்டிருந்த சிறுவன், தனது தந்தை அடித்ததையோ, கடுஞ்சொற்கள் பேசி திட்டியதையோ உணரவில்லை. மகன் எதையும் உணராமல் இருந்ததால், மிகுந்த கோபம் கொண்ட தந்தை எச்சதத்தன், பாற்குடத்தை இடறி மகனது கவனத்தை ஈர்க்க நினைத்து, பாற்குடத்தை தனது கால்களால் உதைக்க முயன்றான் வழிபாட்டுக்கு உரிய பால் கீழே சிதறியதைக் கண்ட சிறுவன், மாடு மேய்ப்பதற்காக தான் வைத்திருந்த கோலினை எடுத்து தனது தந்தை மீது எறிந்தான். இறையில் = குறைந்த நேரத்தில், தந்தையாக இருந்தாலும், பாலினை இடறிய காரணத்தால், அவனை முதலில் தீயோனாக சண்டீசர் கருதி நோக்கியதை உணர்த்தும் பொருட்டு, சேக்கிழார் இங்கே தீயோன் தந்தை என்று கூறுகின்றார்.
பொழிப்புரை
தேனை சேகரிக்கும் எண்ணத்துடன் உள்ள வண்டுகளைக் கவரும் சோலைகள் நிறைந்த மங்கலக்குடி தலத்தில், வீற்றிருக்கும் இறைவன், சிவபூஜைக்கு இடையூறு செய்ய முற்பட்டவனை தந்தை என்றும் பாராமல் மழுவினை வீசி கால்களைத் துண்டித்த சண்டீசனுக்கு, சிவகணங்களுக்கு நாயகன் என்ற பதவியை அளித்து, அருள் செய்தவன் ஆவான். அவன் தனது சடையில் பிறைச் சந்திரனை சூடியுள்ள சோதியாவான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

