ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

72. பாசம் ஒன்றிலராயினும் - பாடல் 5

பிறவித் துயர்களை

News image
Updated On :6 ஜனவரி 2018, 9:34 am

பாடல் 5:
    வண்டு அணைந்தன வன்னியும் கொன்றையும்
    கொண்டு அணிந்த சடைமுடிக் கூத்தனார்
    எண்டிசைக்கும் இடை மருதா என
    விண்டு போயறும் மேலை வினைகளே

விளக்கம்: 
வண்டு அணைந்த மலர்கள் என்று மலர்கள் தேன் நிறைந்து காணப்படும் தன்மை உணர்த்தப் படுகின்றது. மேலை வினைகள்=அடுத்து வரும் பிறவிகளுக்கு உரிய வினைகள். சென்ற பாடலில், இறைவனை நோக்கி நாம் செய்யும் வழிபாடு அடுத்து வரும் பிறவித் துயர்களைத் தீர்த்து விடும் என்று கூறிய அப்பர் பிரான், அந்த நிலை எவ்வாறு ஏற்படும் என்பதை இந்த பாடலில் நமக்கு உணர்த்துகின்றார். உயிர்கள் பல பிறவிகளில் ஈட்டிய வினையின் தொகுதியினை, ஒரே பிறப்பில் நம்மால் அனுபவித்து கழித்து விட முடியாது. அதே போன்று மொத்த வினைகளின் பயனையும் உயிர், நரகம் மற்றும் சொர்கத்தில் அனுபவித்து கழித்து விடவும் முடியாது. அதற்கான வல்லமை நமது உடலில் இருப்பதில்லை. எனவே தான் இறைவன் உயிர்கள் பால் கருணை கொண்டு, வினைகளை பல பிறவிகளில் அனுபவித்து கழிக்குமாறு வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளான். இவ்வாறு அடுத்து வரும் பிறவிகளுக்கு எடுத்துச் செல்லப்படும் வினைகளை, சஞ்சித வினைகள் என்று வடமொழியில் கூறுவார்கள். இதனையே மேலை வினைகள் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். இவ்வாறு அடுத்த பிறவிகளில் நமது வாழ்வின் தன்மைகளை நிர்ணயிக்கும் மேலை வினைகள் கழிந்த பின்னர், பிறவி எடுக்க வேண்டிய அவசியமும் நீங்குவதால், உயிர் பிறப்பிறப்புச் சுழற்சிகளிலிருந்து விடுதலை பெறுகின்றது.     

பொழிப்புரை:
பொழுது புலர்வதன் முன்னர் பறிக்கப்பட்ட மலர்கள் என்பதால், அதனில் உள்ள தேனைப் பருகுவதற்காக வண்டுகள் சுற்றித் திரியும் இயல்பினை உடையதும், அன்று மலர்ந்ததும் ஆகிய கொன்றை, வன்னி, ஊமத்தை ஆகிய மலர்களை அணிந்த சடையினை உடையவரும், தொடர்ந்து நடனம் ஆடுபவரும் ஆகிய இறைவனை, எட்டு திசைகளுக்கும் தலைவனாகிய இடைமருதா என்று அழைத்துத் தொழும் அடியார்களின் மேலை வினைகள் அவர்களை விட்டு நீங்கிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.