திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

111. பூங்கொடி மடவாள் - பாடல் 4

திருநீறு பூசியும்

News image
Updated On :17 அக்டோபர் 2018, 6:30 pm


பாடல் 4: 

    புற்றரரவு அணிந்து நீறு மெய் பூசிப் பூதங்கள் சூழ் தர ஊரூர்
    பெற்றம் ஒன்று ஏறிப் பெய் பலி கொள்ளும் பிரான் அவன் உறைவிடம் வினவில் 
    கற்ற நால் வேதம் அங்கம் ஓர் ஆறும் கருத்தினால் அருத்தியால் தெரியும்
    உற்ற பல் புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே

விளக்கம்:

கருத்தினார்=கருத்தினை உணர்ந்தவர்கள்; பெய்தல்=விடுதல், வார்த்தல், அளித்தல்; புற்றரவு= புற்றில் பதுங்கி வாழும் பாம்பு; பெற்றம்=இடபம்; அருத்தி=அன்பு; 

பொழிப்புரை:

புற்றினில் பதுங்கி வாழும் பாம்பினைத் தனது உடலினில் அணிகலனாக அணிந்தும் உடல் முழுதும் திருநீறு பூசியும் பூத கணங்கள் சூழ்ந்து வர பல ஊர்களுக்கு இடபத்தின் மீதேறி, உலகத்தவர் அளிக்கும் பலியினைப் பெற்றுக் கொள்ள திரிபவனும் ஆகிய தலைவன் உறையும் இடம் யாது என்று நீங்கள் வினவுவீராயின் சொல்கின்றேன் கேட்பீர்களாக; தாங்கள் கற்றுக் கொண்ட நான்கு வேதங்கள் மற்றும் ஆறு அங்கங்களின் பொருளினை உணர்ந்தவர்களாய் அன்புடன் திகழ்வோரும், அவ்வாறு அறிந்ததால் ஏற்பட்ட புகழினை உடையவர்களும் ஆகிய அந்தணர்கள் வாழும் ஓமமாம்புலியூர் தலத்தில் உள்ள வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயில் தான் பெருமான் உறையும் இடம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.