சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

145. பரசு பாணியர் பாடல் - பாடல் 2

அனைவர்க்கும் தலைவன்

News image
Updated On :16 நவம்பர் 2019, 6:30 pm

பாடல் 2:

    பட்ட நெற்றியர் நட்டம் ஆடுவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
    இட்டமா இருப்பார் இவர் தன்மை அறிவாரார்

விளக்கம்:

பண்டைய நாளில் தலைவனாக இருப்பவன் நெற்றியில் பட்டம் என்ற அணிகலனை கட்டிக் கொள்வது வழக்கமாக இருந்தது போலும். பட்டிகை என்றும் அழைக்கப்படுகின்றது. நட்டம்= திருக்கூத்து;

பொழிப்புரை:

அனைவர்க்கும் தலைவன் என்பதை உணர்த்தும் வண்ணம் தனது நெற்றியில் பட்டம் எனப்படும் அணிகலனை அணிந்துள்ள பெருமான் நடனம் ஆடுவதிலும் வல்லவராக திகழ்கின்றார். இவர் காவிரிபூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலத்தில் மிகுந்த விருப்பத்துடன் அமர்ந்து அருள் புரிகின்றார். இவரது தன்மை எத்தகையது என்பதை யாரால் அறிய முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.