பாடல் 6:
பச்சை மேனியர் பிச்சை கொள்பவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
இச்சையா இருப்பார் இவர் தன்மை அறிவாரார்
விளக்கம்:
பவள மேனியர் என்று மூன்றாவது பாடலில் குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில் பச்சை மேனியர் என்று குறிப்பிடுகின்றார். பச்சை என்பது பார்வதி தேவி மற்றும் திருமாலின் மேனி நிறமாக சொல்லப் படுகின்றது. தேவியையும் திருமாலையும் தனது உடலின் இடது பாகத்தில் கொண்டுள்ளமையால் பச்சை நிறத்து மேனியுடன் திகழ்கின்றார் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. தருமபுர ஆதீனத்து குறிப்பினில், பெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான சத்யோஜாதம் முகத்தின் நிறம் பச்சை என்பதை குறிப்பிடும் விதமாக இந்த குறிப்பு அமைந்துள்ளது என்று உணர்த்துகின்றது.
பொழிப்புரை:
தேவியையும் திருமாலையும் தனது உடலின் இடது பாகத்தில் கொண்டுள்ள பெருமான் பச்சை நிறத்து மேனியராக விளங்குகின்றார். இவர் பல இடங்களுக்கும் சென்று பலி ஏற்கின்றார். இவர் காவிரிபூம்பட்டினத்து பல்லவனீச்ச்சரம் தலத்தில் விருப்பத்துடன் வீற்றிருந்து அருள் புரிகின்றார். இவரது தன்மை எத்தகையது என்பதை யாரால் அறிய முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!

கரூரில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்களிக்கலாம்!

டீசல் ஏற்றுமதி வரி அதிகரிப்பு: லிட்டருக்கு ரூ. 55.50-ஆக நிா்ணயம்

கரூா் பேரவைத் தொகுதியில் நாதக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


