தமிழ் சினிமா 2023

ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் என்கிற கே.கே. ரத்தினம் காலமானார்.
தமிழ் சினிமா 2023
Published on
Updated on
2 min read

ஜனவரி

27:: ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் என்கிற கே.கே. ரத்தினம் காலமானார்.

பிப்ரவரி

3:: பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நெல்லை தங்கராஜ் காலமானார்.
5:: தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் பணியாற்றிய  டி. பி. கஜேந்திரன் காலமானார்.
19:: நடிகர் மயில்சாமி  மாரடைப்பு காரணமாக காலமானார்.
21:: பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நடிப்பில் வெளிவந்த "பதான்' திரைப்படம் உலகளவில் ஆயிரம் கோடியை வசூல் செய்து சாதனை புரிந்தது.

ஏப்ரல்

28:: கல்கியின் புகழ் பெற்ற புதினமான பொன்னியின் செல்வன் படமாக வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, த் ரிஷா உள்ளிட்டோர் நடித்தனர். முதல் நாளில் ரூ. 20 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை புரிந்தது.

மே

3:: இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்ட மனோபாலா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
22:: நடிகர் சரத்பாபு காலமானார்.

ஜூலை

12:: தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு காலமானார்.

ஆகஸ்ட்

7:: நடிகை அங்காடி தெரு சிந்து உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
10: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான  ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.600 கோடி வசூல் செய்தது.

செப்டம்பர்

2:: நடிகர் ஆர்.எஸ். சிவாஜி  மாரடைப்பு காரணமாக காலமானார்.
8:: இயக்குநர்,  நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக காலமானார்.
10:: நடிகர் சங்கப் பொதுக் குழு கூட்டத்தில், நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்காக ரூ 40 கோடி கடன் வாங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
11:: திரைக்கு வந்து 30 ஆண்டுகளைக் கொண்டாடும் விதமாக "மறக்குமா நெஞ்சம்' என்ற இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். ஒருங்கிணைப்பாளர்களின் தவறான திட்டமிடுதலால், கூட்டத்தினரை கட்டுப்படுத்த முடியாமல் போகவே, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கு வருத்தம் தெரிவித்து பாதிக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு டிக்கெட் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவாதம் அளித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.
19:: நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா தற்கொலை செய்து கொண்டார்.
22:"மார்க் ஆன்டனி' படத்தின் ஹிந்தி டப்பிங் பதிப்புக்கு சென்சார் போர்டு உறுப்பினர் ஒருவர் தன்னிடம் லஞ்சம் வாங்கியதாக விஷால் குற்றசாட்டை முன்வைத்தார்.

அக்டோபர்

3:: தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்.
15: கலை இயக்குநர் மிலன் காலமானார்.

நவம்பர்

2:: பழம்பெரும் நடிகர்  ஜூனியர் பாலையா மறைந்தார்.
14:: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்த லியோ படம் ரூ.600 கோடியை வசூல் செய்தது.
25:: "பருத்தி வீரன்' பட விவகாரத்தில் இயக்குநர் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அதற்குரிய விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டார் அமீர்.

டிசம்பர்

12:: 33 ஆண்டுகளுக்குப் பின் அமிதாப் பச்சனுடன் ரஜினி இணைந்து நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது. "வேட்டையன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை த.செ.ஞானவேல் 
இயக்குகிறார்.
14:: இயக்குநரும், "மெளனராகம்' படத்தில் ரேவதி அப்பாவாக நடித்தவருமான ரா.சங்கரன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
21:: 21-ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா நிறைவு பெற்றது.  இதில் மொத்தம் 57 நாடுகளின் 126 படங்கள் திரையிடப்பட்டன.  போட்டி பிரிவில் அநீதி, அயோத்தி, மாமன்னன் உள்ளிட்ட படங்கள் சிறந்த படங்களாகத் தேர்வு செய்யப்பட்டன.
22:: நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்துக்காகவும் தொடரப்பட்டுள்ளதாக கூறி, நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மன்சூர் அலிகான் தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com