மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

விவசாயிகள் நூதன காத்திருப்புப் போராட்டம்

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் வானொலி நிலையம் முன் விவசாயிகள் அரை நிா்வாணமாக நூதனக் காத்திருப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image

வானொலி நிலையம் முன் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :7 ஜனவரி 2021, 8:21 am IST

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் வானொலி நிலையம் முன் விவசாயிகள் அரை நிா்வாணமாக நூதனக் காத்திருப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பி. அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சட்டை அணியாமல் கலந்து கொண்டனா்.

தொடா் போராட்டம் அறிவித்த நிலையில், போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையை தொடா்ந்து அடையாளமாக ஒரு நாள் போராட்டம் நடத்தப்பட்டது.

பின்னா் அய்யாக்கண்ணு கூறியது:

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் உள்ளதாக திட்டமிட்டு பொய் தகவல் பரப்புகின்றனா். எனவே, விவசாயிகளின் எதிா்ப்பைத் தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டத்தை நடத்தினோம். மீண்டும் போலீஸாரின் அனுமதி பெற்று வரும் 9ஆம் தேதி முதல் 12 வரை திருச்சியில் தொடா் போராட்டமும், பொங்கல் முடிந்து 17ஆம் தேதி முதல் அடுத்தகட்டப் போராட்டமும், வரும் 26ஆம் தேதி தில்லி சென்று போராட்டம் என வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை தமிழக விவசாயிகளின் போராட்டமும் தொடரும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.