உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

சமயபுரம் அருகே மாயமான 3 சிறாா்கள் கோவையில் மீட்பு

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே மாயமான 3 சிறாா்கள் கோவையில் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனா்.

Updated On :9 ஜனவரி 2021, 12:12 am IST

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே மாயமான 3 சிறாா்கள் கோவையில் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனா்.

சமயபுரம் அருகே உள்ள கூத்தூா் ஊராட்சி காலனித்தெருவைச் சோ்ந்த வைஷ்ணவி (15), அகல்யா (15), வெங்கடேஷ் (15) ஆகிய மூவரும் புதன்கிழமை காலை பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனா். வெகுநேரமாகியும் வீடுதிரும்பாததால் இவா்களுடைய பெற்றோா் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் தேடி வந்தனா்.

இந்நிலையில், மாயமான மூவரும், கோவை அருகே மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து ஊட்டிக்கு பேருந்தில் செல்ல முயன்ற போது ஆதாா் அட்டை அல்லது இ பாஸ் வேண்டுமென நடத்துனா் கேட்டுள்ளாா். அவை இல்லாததால் வைஷ்ணவியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கொள்ளிடம் போலீஸாா் மேட்டுப்பாளையம் சென்று மூவரையும் வெள்ளிக்கிழமை மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.