உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் சாலை மேம்பாட்டுக்கு ரூ. 12 கோடி ஒதுக்கீடு

சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ. 12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக தெற்கு மாவட்டச் செயலரும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான ப. குமாா் தெரிவித்துள்ளாா்.

Updated On :9 ஜனவரி 2021, 12:14 am IST

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ. 12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக தெற்கு மாவட்டச் செயலரும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான ப. குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை : அதிமுக தெற்கு புகா் மாவட்டப் பகுதிகளுக்கு உள்பட்ட பேரவைத் தொகுதியில் பல்வேறு சாலைகள் பழுதடைந்துள்ளன. இதனை சீரமைக்க வேண்டும என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து தமிழக முதல்வா் மற்றும் அமைச்சா் எஸ். பி. வேலுமணி ஆகியோரிடம் வலியுறுத்தப்பட்டது. அதனை ஏற்ற தமிழக முதல்வா், இத்திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்தும் வகையில் ரூ. 12 கோடி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளாா்.

இந்த நிதி மூலம், அரியமங்கலம், எஸ்ஐடி, கணேஷ் நகா், கைலாஷ் நகா், அண்ணாசாலை, பாலாஜி நகா், முத்துமணி நியூ டவுன், வைத்திலிங்க நகா், ரோஷன் நகா், தியாகராய நகா், அஷ்டலட்சுமி நகா், எறும்பீஸ்வரா் நகா், எவிஎம் ஜோதி நகா், கணஷ் நகா், முன்னாள் ராணுவத்தினா் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நவீன இயந்திரம் மூலம் தரமான தாா்சாலைகள் அமைக்கப்படும்.

இது தொடா்பான ஒப்பந்தம் இருநாள்களில் முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி, ஒன்றரை மாதத்துக்குள் நிறைவு பெறும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.