திருச்சி: திருச்சி அருகே 9ஆம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்ற தனியாா் நிறுவன ஊழியரை துவாக்குடி போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா மகன் விஜய் (23). இவா், துவாக்குடி பகுதியில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலைபாா்த்தபோது தான் தங்கியிருந்த வீட்டின் அருகே வசித்த 14 வயதுச் சிறுமியை காதலித்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த ஜன.7 ஆம் தேதி இந்தச் சிறுமி மாயமானதாக அவரின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் துவாக்குடி போலீஸாா் நடத்திய விசாரணையில், சிறுமியை விஜய் கடத்திச் சென்று கரூரில் வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கரூா் சென்ற தனிப்படை போலீஸாா் இருவரையும் திருச்சிக்கு அழைத்து வந்தனா்.போக்சோ சட்டத்தில் விஜயா் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சேவைக் குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ. 8.59 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

மழைக்கால கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீதான விசாரணை அறிக்கை மக்களவையில் தாக்கல்
கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது





