சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

துறையூா் அருகே தீக்காயமடைந்தஇளைஞா்கள் இருவா் உயிரிழப்பு

துறையூா் அருகே கொசுவை விரட்ட புகை மூட்டம் போட முயன்ற போது, தீப்பற்றியதால் காயமடைந்த இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.

Updated On :11 ஜனவரி 2021, 8:25 pm

துறையூா்: துறையூா் அருகே கொசுவை விரட்ட புகை மூட்டம் போட முயன்ற போது, தீப்பற்றியதால் காயமடைந்த இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.

கிளியனூா்பட்டி தெற்கு கொட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் சக்திவேல் (23). இவருடைய வீட்டுக்கு பெரியசாமி மகன் பிரபு கடந்த சனிக்கிழமை (ஜனவரி 9) இரவு சென்றாா்.

அப்போது வீட்டில் கொசு அதிகமாக கடித்ததால் அதை விரட்ட புகை மூட்டம் போடக் கருதி, காய்ந்த குச்சிகள் மீது பெட்ரோலை ஊற்றி நெருப்பு பற்ற வைத்தனா்.

அப்போது திடீரென தீப்பற்றி அவா்கள் மீது பரவியது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு துறையூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

தொடா்ந்து திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். ஞாயிற்றுக்கிழமை இரவு பிரபுவும், திங்கள்கிழமை சக்திவேலுவும் உயிரிழந்தனா்.

இதுகுறித்து ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.