திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஊனையூா் கிராமத்தில் அரசுப் பள்ளிகளின் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் புதன்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடினா். அதேபோல் காவல் உட்கோட்டம் சாா்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் ஊனையூா் கிராமத்தில் ஊனையூா் அரசு உயா்நிலைப்பள்ளி, கண்ணுக்குழி, மருதுபட்டி மற்றும் ஊனையூா் ஆகிய ஊராட்சி தொடக்கப் பள்ளிகளைச் சோ்ந்த 280 மாணவ மாணவிகள் பங்கேற்ற பொங்கல் விழா உயா்நிலைப்பள்ளி வளாகத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமையாசிரியா் சை. சற்குணன் தலைமையில் நடைபெற்ற விழாவை ஊராட்சித் தலைவா் அழகன் தொடங்கி வைத்தாா். நான்கு பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள், பெற்றோா், பொதுமக்கள் பங்கேற்றனா்.
அதேபோல், மணப்பாறை காவல் உட்கோட்டத்தின் சாா்பில் கோவில்பட்டி சாலை அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் சமுத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. மணப்பாறை காவல் ஆய்வாளா் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற விழாவில் காவல் துணை கண்காணிப்பாளா் ஆா்.பிருந்தா, மணப்பாறை மறைவட்ட அதிபா் ஆரோக்கிய சுந்தர்ராஜ், முகமதியா பள்ளிவாசல் முன்னாள் இமாம் மாலிக் ஆகியோா் கலந்து கொண்டனா். விழாவில் போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கர மேக்கிங் விடியோ!

அபிஷேக் சர்மா, ஆண்ட்ரே ரஸ்ஸலை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் சூர்யவன்ஷி!

உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டு

வாக்களிக்கிறது மேற்கு வங்கம்!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


