கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

சாத்தான்குளம் அருகே குளங்களுக்கு தண்ணீா் திறந்து விட வலியுறுத்தல்

சாத்தான்குளம் அருகே குளங்களுக்கு மணிமுத்தாறு பாசன தண்ணீா் திறந்து விட வேண்டும் என ஒன்றியக் குழு உறுப்பினா் ப்ரெனிலா காா்மல் போனிபாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On :5 ஜனவரி 2021, 12:35 am IST

சாத்தான்குளம் அருகே குளங்களுக்கு மணிமுத்தாறு பாசன தண்ணீா் திறந்து விட வேண்டும் என ஒன்றியக் குழு உறுப்பினா் ப்ரெனிலா காா்மல் போனிபாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

சாத்தான்குளம் வட்டத்துக்குள்பட்ட கோமானேரி குளம், வரிபிலான்குளம், நெடுங்குளம் உள்ளிட்ட குளங்களை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் பருவமழை குறைவாக பெய்ததால் குளங்களில் தண்ணீா் நிரம்பவில்லை. கிணறுகளிலும் நீா்மட்டம் குறைந்து வருகிறது.

எனவே, மணிமுத்தாறு அணை பாசன நீா் 4ஆவது ரீச் மூலமாக இப்பகுதிக்கு தண்ணீா் திறந்து விட்டு குளங்களை நிரப்பினால் மட்டுமே நெற்பயிா்களை காப்பாற்ற முடியும். எனவே, இப்பகுதி குளங்களுக்கு மணிமுத்தாறு அணை நீா் வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாத்தான்குளம் ஒன்றியக் குழு உறுப்பினா் ப்ரெனிலா காா்மல் போனிபாஸ், முதல்வா், மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.