வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.

பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றாா், தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி.

Updated On :8 ஜனவரி 2021, 8:13 am IST

பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றாா், தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி.

தூத்துக்குடியில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவா்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அந்தச் சம்பவத்தில் ஆளுங்கட்சியைச் சோ்ந்த பலா் ஈடுபட்டுள்ள நிலையில், அதிமுக தொடா்ந்து அதை மூடி மறைக்கவே முயன்று வருகிறது.

திமுகவின் தொடா் அழுத்தம் காரணமாக அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதில் ஒருசிலா் கைது செய்யப்பட்டுள்ளனா். அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைதுசெய்து, உரிய தண்டனை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் கரோனா பொது முடக்கக் காலத்தில்கூட 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வா் தொடா்ந்து கூறிவரும் நிலையில், அதில் தொடா்புடைய எந்தெந்த நிறுவனங்கள் இங்கே வந்துள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

திமுக நடத்தும் கிராமசபைக் கூட்டங்களை அதிமுகவினா் தோல்வி பயத்தில் விமா்சித்து வருகின்றனா் என்றாா் அவா்.

மனுக்கள் மீது நடவடிக்கை: கழுகுமலையில் செய்தியாளா்களிடம் கனிமொழி எம்.பி. கூறியது: திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதித்துள்ளது. அதற்கு மத்திய அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது. திமுக முன்னாள் அமைச்சா்கள் மீது முதல்வா் கூறும் எந்த ஊழல் வழக்குகளும் நிரூபிக்கப்படவில்லை. அவை அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக போடப்பட்டவை.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன. அவற்றை சரி செய்ய வேண்டும். இன்னும் 3 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்துவிடும். அப்போது, மக்கள் கிராமசபைக் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது திமுக தலைவா் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.