ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

திருச்செந்தூரில் குவியும் பாத யாத்திரை பக்தா்கள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா்.

News image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சனிக்கிழமை பாதயாத்திரையாக வந்த பக்தா்கள்.

Updated On :10 ஜனவரி 2021, 1:34 am IST

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா்.

திருச்செந்தூா் முருகனை வழிபடுவதற்காக மாலை அணிந்து, விரதமிருந்த பக்தா்கள் வேல் குத்தி, காவடி எடுத்து கடந்த சில நாள்களாக பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா். குறிப்பாக விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பக்தா்கள் அதிகளவில் பாதயாத்திரையாக வருகை தருகின்றனா்.

பொது முடக்கத்தில் தளா்வு அளிக்கப்பட்டு, கடலில் நீராட அனுமதியளிக்கப்பட்டுள்ளதால், பக்தா்கள் புனித நீராடி சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனா். இதனால் கோயில் வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

தைப்பொங்கலுக்கு அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு: ஜன. 14-ஆம் தேதி தைப்பொங்கலை முன்னிட்டு, அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், 2.30 மணிக்கு உதயமாா்த்தாண்ட தீபாராதனை நடைபெற்று, தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன.

ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையா் (பொ) கல்யாணி, உதவி ஆணையா் வே.செல்வராஜ் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.