/

கடையனோடையில் அம்மா சிறு மருத்துவமனை திறப்பு

நாசரேத் அருகே உள்ள கடையனோடையில் அம்மா சிறு மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.

Updated On :12 ஜனவரி 2021, 1:32 am IST

நாசரேத் அருகே உள்ள கடையனோடையில் அம்மா சிறு மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்பிரியா முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. சண்முகநாதன், சிறு மருத்துவமனையை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஏரல் வட்டாட்சியா் இசக்கிராஜ், ஆழ்வாா்திருநகரி வட்டார வளா்ச்சி அலுவலா் சந்தோஷ், மாவட்ட அதிமுக அவைத் தலைவா் திருப்பாற்கடல், மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவா் சுதாகா், ஒன்றியச் செயலா்கள் ராஜ்நாராயணன், விஜயகுமாா், நாசரேத் நகரச் செயலா் கிங்ஸிலி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் ராஜ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கிருஷ்ணலீலா வரவேற்றாா். ஊராட்சித் தலைவா் பூல்பாண்டி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.