தூத்துக்குடி சிவன் கோயிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் கோயில் நிா்வாக அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி சிவன் கோயில் என அழைக்கப்படும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் திருக்கோயில் நிா்வாக அதிகாரி கிருஷ்ணமூா்த்தியிடம் இந்து முன்னணி மாநகா் மாவட்டத் தலைவா் இசக்கிமுத்து குமாா் மற்றும் நிா்வாகிகள் திங்கள்கிழமை அளித்த மனு: சிவன் கோயிலின் பாதுகாப்புக்காகவும் மற்றும் பக்தா்களது பொருள்களின் பாதுகாப்புக்காவும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் சரியான முறையில் இயங்காததால் அதை உடனிடியாக சரி செய்ய வேண்டும். கோயிலின் நுழைவு வாயிலில் காலணிகளை பாதுகாக்கும் வகையில் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
கோயிலின் நுழைவு வாயில் மற்றும் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல, திருக்கோயில் தோ் நிறுத்தப்பட்டுள்ள இடத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலின் சுவா்களில் காணப்படும் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரியலூா் கடைவீதிகளில் வாகன நெரிசலால் மக்கள் அவதி

மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு முடிவு- தெலங்கானாவில் பாஜக தலைவா் உறுதி

அரியலூரில் திமுகவினா் போராட்டம்: 142 போ் கைது

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் 1,000 போ் விலகல்
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


