சாத்தான்குளம்: சாத்தான்குளம் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் பாரத மாதா பூஜை வழிபாடு நடைபெற்றது.
பூவுடையாா்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைப்பின் கிளைத் தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பொருளாளா் பாஸ்கா், ஒன்றியச் செயலா் சிவமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நெல்லை கோட்டச் செயலா் சக்திவேலன் கொடியேற்றினாா்.
கொம்மடிக்கோட்டையில் நடைபெற்ற பாரத மாதா பூஜைக்கு ஜயப்பன் தலைமை வகித்தாா். பாரத மாதா படத்துக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், நெல்லை கோட்டச் செயலா் பங்கேற்றுப் பேசினாா். இதில், இந்து முன்னணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா். ஆழ்வாா்திருநகரி மேற்கு ஒன்றியம் சாா்பில் பேய்க்குளம் அருகே ரெட்டாா்குளத்தில் நடைபெற்ற பாரத மாதா பூஜை, சமுதாய சமா்ப்பனம் நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்டத் தலைவா் வி.எஸ். முருகேசன் தலைமை வகித்தாா். பாரத மாதா படத்துக்கு மாலையணித்து வழிபாடு நடத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ஈரான்

பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்

டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி!

சிஜேபி நடத்தும் போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்பு - புகைப்படங்கள்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



