பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்! அதிமுக இரு தரப்பு மனுக்கள் மீது நாளை முடிவு! பேரவைத் தலைவர் அதிமுகவிலிருந்த கருத்து வேறுபாடு நீங்கிவிட்டது! பதவி ஆசை இல்லை! எஸ்.பி. வேலுமணி தில்லியில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு வரவேற்பு!கர்நாடக முதல்வர் சித்தராமையா நாளை ராஜிநாமா? குண்டர் தடுப்புச் சட்ட ரத்து வழக்கு! உயர் நீதிமன்றத்தில் காத்திருக்கும் முன்னாள் காவல் ஆணையர் அருண்!இணையும் அதிமுக: இபிஎஸ்ஸுடன் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு!பைஜுஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை!பினராயி விஜயன் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
/

யுபிஎஸ்சி: குடியரசுத் தலைவரை எதன் அடிப்படையில் பதவி நீக்கம் செய்யலாம்?

குடியரசுத் தலைவரின் பதவி நீக்கம் தொடர்பாக...

News image
Updated On :27 மே 2026, 6:27 pm IST

குடியரசுத் தலைவரின் பதவி நீக்கம் தொடர்பாக பின்வருமாறு காணலாம்.

குடியரசுத் தலைவரின் பதவி நீக்கம்

அரசியலமைப்பை மீறியதற்காக குடியரசுத் தலைவரை ‘பதவி நீக்கத் தீர்மானம்’ (Impeachment) மூலம் பதவியில் இருந்து நீக்கலாம். ஆனால், “அரசியலமைப்பை மீறுதல்” என்ற சொல்லுக்கு அரசியலமைப்பில் தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை.

இந்த பதவி நீக்க குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தின் எந்த ஒரு அவையும் தொடங்கலாம். குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் அவையின் உறுப்பினர்களில் குறைந்தது நான்கில் ஒரு பங்கு உறுப்பினர்கள் அதில் கையெழுத்திட வேண்டும். மேலும், குடியரசுத் தலைவருக்கு 14 நாட்கள் முன் அறிவிப்பு வழங்கப்பட வேண்டும்.

அந்த அவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அது மற்றொரு அவைக்கு அனுப்பப்படும். அந்த அவை குற்றச்சாட்டுகளை விசாரிக்கும். விசாரணையின்போது குடியரசுத் தலைவருக்கு நேரில் ஆஜராகவும், தனது சார்பில் பிரதிநிதியை நியமிக்கவும் உரிமை உண்டு.

மற்ற அவையும் குற்றச்சாட்டுகளை ஏற்று, தனது மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பதவி நீக்கத் தீர்மானத்தை நிறைவேற்றினால், அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்தே குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் என்பதாகும்.

இதனால், குடியரசுத் தலைவரின் பதவி நீக்க நடைமுறை நாடாளுமன்றத்தில் நடைபெறும் பகுதியளவு நீதித்துறை (Quasi-Judicial) செயல்முறையாக கருதப்படுகிறது.

இந்த சூழலில் கவனிக்க வேண்டிய இரண்டு முக்கிய அம்சங்கள்:

  1. நாடாளுமன்றத்தின் எந்த அவையிலான நியமன உறுப்பினர்களும் குடியரசுத் தலைவரின் பதவி நீக்க நடைமுறையில் பங்கேற்கலாம். ஆனால், அவர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் பங்கேற்க முடியாது.

  2. மாநில சட்டப்பேரவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும், தில்லி மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பங்கேற்பார்கள். ஆனால், பதவி நீக்க நடைமுறையில் பங்கேற்க முடியாது.

Summary

Regarding the removal of the President...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.