கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசு தோல்வியா? - ராமதாஸ் கேள்வி தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததற்கு பதவி ஆசை காரணம் இல்லை: திருமாவளவன் விளக்கம்சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.69 ஆயிரம் கட்டணம்! உண்மை என்ன?எங்கள் கையெழுத்தையே படிக்க முடியவில்லை: சிபிஎஸ்இ மாணவர்கள் அதிருப்திசென்னையில் வானம் மேகமூட்டம்! மெரினாவில் வீசிய சூறைக்காற்று!கோவை சிறுமி கொலை: கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்புமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரியை தொடுகிறது! மே 28 வரை எச்சரிக்கை
/

யுபிஎஸ்சி: குடியரசுத் தலைவர் பதவிக்கான நிபந்தனைகள், பதவிக்காலம்!

குடியரசுத் தலைவர் பதவிக்கான நிபந்தனைகள் மற்றும் அவரது பதவிக்காலம் தொடர்பாக...

News image
Updated On :23 மே 2026, 3:17 pm IST

குடியரசுத் தலைவர் பதவிக்கான நிபந்தனைகள் மற்றும் அவரது பதவிக்காலம் தொடர்பான விஷயங்களை பின்வருமாறு காணலாம்.

குடியரசுத் தலைவர் பதவிக்கான நிபந்தனைகள்

குடியரசுத் தலைவர் தொடர்பாக அரசியலமைப்பு பின்வரும் நிபந்தனைகளை வகுத்துள்ளது,

  1. அவர் நாடாளுமன்றத்தின் எந்த அவையின் அல்லது மாநில சட்டமன்றத்தின் எந்த அவையின் உறுப்பினராக இருக்கக் கூடாது. அப்படிப்பட்ட ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்கும் நாளிலிருந்து அந்த அவையில் தனது இடத்தை காலி செய்ததாகக் கருதப்படுவார்.

  2. அவர் வேறு எந்த லாபம் தரும் பதவியையும் வகிக்கக் கூடாது.

  3. அவர் அதிகாரபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனை (Rashtrapati Bhavan) வாடகை செலுத்தாமல் பயன்படுத்தும் உரிமை பெற்றவர்.

  4. நாடாளுமன்றம் நிர்ணயிக்கும் ஊதியம், படிகள் மற்றும் சலுகைகளை பெற அவர் உரிமையுடையவர்.

  5. அவரது பதவிக்காலத்தில் அவருக்கான ஊதியம் மற்றும் படிகளை குறைக்க முடியாது.

இந்திய நாடாளுமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரின் மாத சம்பளத்தை ₹1.50 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்த்தியது. அதற்கு முன்பு, 2008 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற குடியரசுத் தலைவரின் ஓய்வூதியம் ஆண்டுக்கு ₹3 லட்சம் என்பதிலிருந்து, அவரின் மாத சம்பளத்தின் 50% ஆக உயர்த்தப்பட்டது.

மேலும், முன்னாள் குடியரசுத் தலைவர்களுக்கு கீழ்க்கண்ட வசதிகளும் வழங்கப்படுகின்றன.

  • உபகரணங்களுடன் கூடிய வீடு

  • தொலைபேசி வசதி

  • கார் வசதி

  • மருத்துவ சிகிச்சை

  • பயண வசதி

  • செயலாளர் பணியாளர்கள்

  • ஆண்டுக்கு ₹1,00,000 வரை அலுவலகச் செலவுகள்

குடியரசுத் தலைவர் இறந்துவிட்டால் அவரது துணைவியாருக்கு, ஓய்வு பெற்ற குடியரசுத் தலைவரின் ஓய்வூதியத்தின் 50% அளவில் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். அதோடு, வீடு, தொலைபேசி, கார், மருத்துவம், பயணம், செயலாளர் உதவி மற்றும் ஆண்டுக்கு ₹20,000 வரை அலுவலகச் செலவுகளுக்கான தொகையும் வழங்கப்படும்.

குடியரசுத் தலைவர் பல சிறப்பு உரிமைகள் மற்றும் சட்டப் பாதுகாப்புகளையும் அனுபவிக்கிறார். அவை பின்வருமாறு,

  • அதிகாரபூர்வ நடவடிக்கைகளுக்காக அவருக்கு தனிப்பட்ட சட்டப் பொறுப்பு இல்லை.

  • பதவிக்காலத்தில், அவரது தனிப்பட்ட செயல்கள் தொடர்பாக இருந்தாலும் கூட, எந்த குற்றவியல் நடவடிக்கையும் அவர்மீது எடுக்க முடியாது.

  • அவரை கைது செய்யவோ சிறையில் அடைக்கவோ முடியாது.

  • ஆனால், அவரது தனிப்பட்ட செயல்கள் தொடர்பாக, இரண்டு மாதங்கள் முன் அறிவிப்பு வழங்கப்பட்டால், பதவிக்காலத்திலேயே அவர் மீது சிவில் வழக்குகள் தொடரப்படலாம்.

குடியரசுத் தலைவரின் பதவிக்காலம்

குடியரசுத் தலைவர் தனது பதவியை ஏற்றுக் கொள்ளும் நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள் பதவியில் இருப்பார்.

ஆனால்,

  • அவர் எந்த நேரத்திலும் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு துணைத் தலைவருக்கு அனுப்பி பதவியை ராஜினாமா செய்யலாம்.

  • மேலும், அவரது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே, ‘Impeachment’ (பதவி நீக்க நடைமுறை) மூலம் அவரை பதவியில் இருந்து நீக்கவும் முடியும்.

குடியரசுத் தலைவர் தனது ஐந்து ஆண்டுக் காலம் முடிந்த பின்னரும், புதிய குடியரசுத் தலைவர் பொறுப்பேற்கும் வரை பதவியில் தொடரலாம்.

அவர் மீண்டும் அதே பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் தகுதியுடையவர். எத்தனை முறை வேண்டுமானாலும் அவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம்.

ஆனால், அமெரிக்காவில் ஒருவரை இரண்டு முறை மட்டுமே குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்க முடியும்.

Summary

Regarding the conditions for the office of the President and the duration of the term...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.