நீங்கள் கடமையின் நெறியைக் கடைப்பிடியுங்கள். உங்கள் உடன் பிறந்தவர்களிடம் அன்புடன் நடந்துகொள்ளுங்கள். அவர்களைத் துன்பத்திலிருந்து விடுவிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
-பகவான் புத்தர்
ஜீவகாருண்ய ஒழுக்கமில்லாமல் ஞானம், யோகம், தவம், விரதம், ஜபம், தியானம் முதலியவைகளைச் செய்பவர்கள் கடவுள் அருளுக்குச் சிறிதும் பாத்திரமாகமாட்டார்கள். அவர்களை ஆன்மவிளக்கம் உள்ளவர்களாகவும் நினைக்கக் கூடாது.
- வள்ளலார்
நாம் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அறம் ஒன்றுதான் நம்முடன் மறுவுலகிலும் நல்ல நண்பனாகத் தொடர்ந்து வருகிறது; மற்றவை எல்லாம் சரீரத்தோடு நாசமாகிவிடுகின்றன.
-பஞ்சதந்திரம்
வாழ்க்கையில் அடக்கம், பொறுமை, சத்தியம், குருபக்தி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். மறுபிறவி இல்லாமல் இருப்பதற்கு உரிய நல்ல வழி, இந்தப் பிறவியில் இறைவன் மீது பக்தியை வளர்த்துக்கொள்வதுதான்.
-மயான யோகியார்
உனக்கு முக்தியில் விருப்பம் இருக்குமானால்,
புலனின்பத்தை விஷம் போன்று வெகு தூரத்தில் ஒதுக்கித் தள்ளிவிடு. திருப்தி, இரக்கம், பொறுமை, நேர்மை, மனஅமைதி, புலனடக்கம் ஆகியவற்றை எப்போதும் பரிவுடன் கடைப்பிடிக்க வேண்டும்.
-விவேகசூடாமணி
சாஸ்திரங்களில் இருக்கும் கடுஞ்சொற்கள் அறிவை வளர்க்கும்; பெரியோர்களின் கொடுஞ்சொற்கள் நல்வாழ்வை அளிக்கும். அரசனின் கொடிய சொற்களோ போராட்டத்தை வளர்க்கும்.
-கெளடில்யர்
பெருந்தன்மை உடையவர்கள், மிகவும் நல்ல புகழ் படைத்தவர்கள், தர்மத்தில் பற்றுடையவர்கள், நல்லவர்களுடன் சேர்ந்திருப்பவர்கள் ஆகியவர்கள் உலகில் பூஜிக்கத்தக்கவர்கள். உள்ளத்தில் அன்பு பெருக்கற்றவன் நீரற்ற மேகத்திற்கும், பழமற்ற மரத்திற்கும், பாலற்ற பசுவுக்கும் சமமானவன்.
-ராமாயணம்
நமக்கு மிகவும் பிரியமான விஷ்ணு திருத்தலம்
திருநாராணபுரத்தில் ஒரு கூரைவீடாகிலும் கட்டிக்கொண்டு அதில் வாசம் செய்யுங்கள். அது முடியாத பட்சத்தில், அர்த்தத்துடன் த்வயமந்திரத்தை ஜபம் செய்தபடியே நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள்.
-ஸ்ரீ ராமானுஜர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஐபிஎல் சூதாட்டம்: தில்லியில் நால்வா் கைது

கம்பெனி சட்ட தீா்ப்பாய பொறுப்பு தலைவா் நியமன விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

அனைத்து அரசு ஊழியா்களுக்கும் பயோமெட்ரிக் வருகை கட்டாயம்: முதல்வா் ரேகா குப்தா நடவடிக்கை
ஐஎஸ்ஐ ஆதரவு உளவுப் பிரிவு அம்பலமானது: 11 போ் கைது
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

