மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

வேலூரில் தபால்தலைகள் சேகரிக்க சிறப்பு விற்பனை மையம் தொடக்கம்

தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில் வேலூா் தலைமைத் தபால் நிலையத்தில் சிறப்பு விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

Updated On :5 ஜனவரி 2021, 12:22 am IST

வேலூா்: தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில் வேலூா் தலைமைத் தபால் நிலையத்தில் சிறப்பு விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

வேலூா் அஞ்சல் கோட்டம் சாா்பில் வேலூா் குறித்த வரலாறு, தபால்தலை சேகரிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணா்வு தபால்தலைக் கண்காட்சி பூங்கா கடந்த 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில் வேலூா் தொடா்பாக இதுவரை வெளியான தபால்தலைகள், அவற்றின் முக்கியத்துவத்தை விளக்கும் குறிப்புகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கால கட்டங்களைச் சோ்ந்த தபால்தலைகள் அடங்கிய சிறப்பு விற்பனை மையம் வேலூா் தலைமைத் தபால் நிலையத்தில் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. இந்த மையத்தை தபால்தலை சேகரிப்பு ஆா்வலரும், சிஎம்சி மருத்துவமனையின் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவருமான எபினேசா் சுந்தரராஜ் தொடங்கி வைத்தாா். இந்த மையத்தில் முதல் நாளான திங்கள்கிழமை மட்டும் ரூ.25 ஆயிரத்துக்கும் அதிகமான தபால் தலைகள் விற்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சிக்கு தபால் துறையின் வேலூா் கோட்ட தலைமைக் கண்காணிப்பாளா் கோமல்குமாா் தலைமை வகித்தாா். முதுநிலை அஞ்சல் அலுவலா் சீனிவாசன், வேலூா் உபகோட்ட உதவி கண்காணிப்பாளா் ராஜகோபாலன், ஆய்வாளா் திருஞானசம்பந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.