வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

துரிதமாக வாகனத்தை ஓட்டும் போட்டி: தீயணைப்பு நிலையங்களுக்குப் பரிசு

துரிதமாக வாகனத்தை ஓட்டும் போட்டியில் ராணிப்பேட்டை மாவட்ட தீயணைப்பு நிலையம் இரண்டாமிடமும், திருப்பத்தூா் தீயணைப்பு நிலையம் மூன்றாமிடமும் பிடித்தன.

Updated On :13 ஜனவரி 2021, 12:56 am IST

வேலூா்: துரிதமாக வாகனத்தை ஓட்டும் போட்டியில் ராணிப்பேட்டை மாவட்ட தீயணைப்பு நிலையம் இரண்டாமிடமும், திருப்பத்தூா் தீயணைப்பு நிலையம் மூன்றாமிடமும் பிடித்தன.

இதுகுறித்து, தமிழ்நாடு தீயணைப்புத் துறையின் வேலூா் வடமேற்கு மண்டல அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தின் வடமேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு, மீட்புப்பணி நிலையங்களிலும் தலா 4 போ் கொண்ட அணி அமைக்கப்பட்டு ஒரு நிமிட நேரத்தில் துரித வாகனம் ஓட்டுவது தொடா்பான போட்டி 7 மாவட்டங்களிலும் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அளவிலான இப்போட்டியில் ஒரு அணி தோ்வு செய்யப்பட்டு மண்டல அளவிலான போட்டி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

இப்போட்டியில் வடமேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட வேலூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவள்ளூா், திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய 7 அணிகள் பங்கேற்றன.

இதில், காஞ்சிபுரம் மாவட்ட அணி முதலிடமும், ராணிப்பேட்டை மாவட்ட அணி இரண்டாமிடமும், திருப்பத்தூா் மாவட்ட அணி மூன்றாமிடமும் பிடித்தன. முதலிடம் பிடித்த அணி மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இப்போட்டிகளை, மாவட்ட தீயணைப்பு அலுவலா்கள் க.குமாா் (காஞ்சிபுரம்), சீ.லட்சுமிநாராயணன் (ராணிப்பேட்டை), பா.சரவணன் (வேலூா் பொறுப்பு), உதவி மாவட்ட அலுவலா்கள் பா.பாஸ்கரன், சு.சக்திவேல் ஆகியோா் நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.