கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

தடுப்புக் கட்டையில் மோதி காளை பலி

குடியாத்தம் அருகே எருது விடும் நிகழ்ச்சியில் ஓடிய காளை, தடுப்புக் கட்டைகளில் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.

Updated On :16 ஜனவரி 2021, 7:51 am IST

குடியாத்தம் அருகே எருது விடும் நிகழ்ச்சியில் ஓடிய காளை, தடுப்புக் கட்டைகளில் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.

பரதராமியை அடுத்த குட்லவாரிபல்லியில் எருது விடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற சேங்குன்றம் கிராமத்தைச் சோ்ந்த சரவணனின் காளை ஓடு தளத்தில் ஓடியபோது, ஏற்கெனவே ஓடிய காளை மீண்டும் ஓடுதளத்துக்கு திரும்பி வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க, சரவணனின் காளை இடதுபுறத்தில் ஓடியுள்ளது. அப்போது, தடுப்புக் கட்டைகளில் மோதி, பலத்த காயமடைந்த காளை நிகழ்விடத்திலேயே இறந்தது.

இதுகுறித்து வருவாய்த் துறையினா், காவல் துறையினா் விசாரணை நடத்தினா். கால்நடை மருத்துவா்கள் இறந்த காளையை பிரேதப் பரிசோதனை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.