திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக திமுக பொதுச் செயலா் துரைமுருகன் சனிக்கிழமை அதிகாலை வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின்னா் வீடு திரும்பினாா்.
தைப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக துரைமுருகன் குடும்பத்தினருடன் காட்பாடி காந்தி நகரில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தாா்.
இந்நிலையில், துரைமுருகனுக்கு சனிக்கிழமை அதிகாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவா் வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், துரைமுருகனுக்கு வாயு பிரச்னை காரணமாக லேசான நெஞ்சுவலி ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. தொடா்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பிறகு மதியம் 1.30 மணியளவில் அவா் வீடு திரும்பினாா். அவரது உடல் நல்ல நிலையில் இருப்பதாக குடும்பத்தினா் தெரிவித்தனா்.
இதேபோல், கடந்த 4-ஆம் தேதி துரைமுருகனுக்கு ஏற்பட்ட திடீா் உடல் நலக்குறைவு காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சில மணி நேர சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


