பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் ஒன்றியங்களில் கிளைத் தேர்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒன்றிய அமைப்பாளர் இரா.இளையராஜா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எம்.எஸ்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நகர அமைப்பாளர் நா.இராஜேஷ் வரவேற்றார்.
பால்ராம்பட்டு, கரடிசித்தூர், வேளாக்குறிச்சி, தியாகதுருகம் உள்ளிட்ட பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்டோர் கட்சியில் உறுப்பினராக
இணைந்தனர்.
கிளைத் தேர்தலில் தியாகதுருகம் பகுதிக்கு எஸ்.சி. அணியின் மாவட்டத் தலைவர் இ.சங்கரசுப்பிரமணி, கள்ளக்குறிச்சி பகுதிக்கு வழக்குரைஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் இரா.ராஜ்பிரசன்னா ஒன்றிய தேர்தல் அதிகாரியாக செயல்பட்டனர்.
மாவட்ட அவை செயலாளர் மீனாட்சி சுந்தரம், கிருஷ்ணன், வைத்தியநாதன், பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். வி.தாமரைச் செல்வன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பிஃபாவின் வரலாறு... 1942 உலகப் போரால் உலகக் கோப்பைக்கு வந்த சோதனை!

நடிகர் அஜித்தின் ஏகே - 64... யார்தான் தயாரிப்பாளர்?

பசியாற சோறு... நினைவாக மரக்கன்று..!

அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவருக்கு வீட்டுக் காவல்!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |


