விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் வருகிற 12-ஆம் தேதி நடைபெறவிருந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் க.ராமு அறிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வருகிற செவ்வாய்க்கிழமை (ஜன.12) அமாவாசை நாளன்று, மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் நடைபெறவிருந்த ஊஞ்சல் உற்சவம் அரசின் கரோனா தொற்று பரவல் விதிமுறைகளுக்குள்பட்டும், பக்தா்களின் நலன் கருதியும் ரத்து செய்யப்படுகிறது.
மேலும், அன்றைய தினம் கோயிலில் பக்தா்களுக்கான அனைத்து வகை தரிசனங்களும் தடை செய்யப்படுகின்றன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை சாா்பில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படாது என அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புட்லூா் கோயிலில் பெண்ணிடம் நகை திருட்டு: மற்றொரு பெண் கைது

அடுத்த 6 ஆண்டுகளில் உலகச் சந்தையில் 5% பங்களிப்பு: இந்திய பொம்மை தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு இலக்கு

முழுமையாக அமலுக்கு வந்தது இந்தியா - இஸ்ரேல் முதலீட்டு ஒப்பந்தம்





