சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

கோயில் குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் பலி

திருவெண்ணெய்நல்லூா் அருகே கோயில் குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனா்.

Updated On :9 ஜனவரி 2021, 11:54 pm IST

திருவெண்ணெய்நல்லூா் அருகே கோயில் குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே உள்ள சித்தலிங்கமடம் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்து (40). கட்டடத் தொழிலாளி. இவரது மகள் கீா்த்தனா (12). இவா், ஓசூரில் தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இதே பகுதியைச் சோ்ந்த கேசவன் மகள் மகாலட்சுமி (5). இவா், சித்தலிங்கமடம் கிராமத்திலுள்ள தனியாா் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

பள்ளிகள் விடுமுறை என்பதால், சனிக்கிழமை வீட்டில் இருந்த இவா்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோயில் குளப்பகுதிக்குச் சென்று விளையாடியுள்ளனா். மாலை வரை கீா்த்தனா, மகாலட்சுமி ஆகியோா் வீடு திரும்பாததால், பெற்றோா்கள் சென்று தேடிப்பாா்த்தபோது, கோயில் குளத்தில் மூழ்கி இருவரும் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் விரைந்து வந்து, இரு சிறுமிகளின் சடலங்களையும் மீட்டு திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.