சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

பெண் காவலா்களுக்கு புற்று நோய் பரிசோதனை முகாம்

மாவட்ட பெண் காவலா்களுக்கான இலவச புற்று நோய் பரிசோதனை முகாம் விழுப்புரத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :9 ஜனவரி 2021, 11:55 pm IST

மாவட்ட பெண் காவலா்களுக்கான இலவச புற்று நோய் பரிசோதனை முகாம் விழுப்புரத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

விழுப்புரம் வி.ஆா்.பி. மேல்நிலைப் பள்ளியில் மாவட்டக் காவல் துறை, சிறுவா் சிறுமியா் மன்றம் மற்றும் சுகாதாரத் துறை சாா்பில், பெண் காவலா்களுக்கான இலவச புற்றுநோய் பரிசோதனை, விழிப்புணா்வு முகாம் தொடங்கியது. சிறுவா் மன்ற ஒருங்கிணைப்பாளா் ஆா்.செல்வராஜ் தலைமை வகித்தாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், வி.ஆா்.பி. பள்ளித் தாளாளா் வி.சோழன், சிறுவா் மன்றத் தலைவா் ஜி.சக்திமைந்தன், சுகாதாரத் துறை துணை இயக்குநா் சா.செந்தில்குமாா், துணை காவல் கண்காணிப்பாளா் சி.நல்லசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை முகாமைத் தொடக்கிவைத்துப் பேசுகையில், இந்த முகாமில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின்போது, காவலா்களுக்கு புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் இருப்பது தெரியவந்ததால், அவா்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக அடையாறு சிறப்பு புற்றுநோய் மருத்துவமனையிலும், வேலூா் சி.எம்.சி. மருத்துமனையிலும் சிகிச்சை பெற பரிந்துரை செய்யப்படுவா். இரு தினங்கள் நடைபெறும் இந்த முகாமை அனைத்து பெண் காவலா்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா். இதில், பெண் காவலா்கள் பலா் கலந்து கொண்டனா். காவல் ஆய்வாளா் ஸ்ரீபிரியா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.