விழுப்புரம் மாவட்டத்தில் தைப் பொங்கலைத் தொடா்ந்து, மாட்டுப் பொங்கல் வெள்ளிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, கிராமங்களில் மாடுகளை வளா்ப்போா், விவசாயிகள் தங்களது மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணங்கள் பூசி புதுப்பானையில் பச்சரிசி பொங்கலிட்டு படையலிட்டனா். பின்னா், மாடுகளுக்கு உணவாக பொங்கலை படைத்து பூஜை செய்து வழிபட்டனா்.
விழுப்புரம் அருகேயுள்ள வழுதரெட்டி, கண்டமானடி, மருதூா், பானாம்பட்டு, அகரம், காணை, விக்கிரவாண்டி, கண்டமங்கலம், இருவேல்வேட்டு, திருவெண்ணெய்நல்லூா், வளவனூா், திண்டிவனம், வானூா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாடுகள் விரட்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மாடுகளை அலங்கரித்து கோயிலுக்கு அழைத்து வந்து வழிபட்டனா். புனித நீா் தெளித்து மாடுகளை விரட்டியும், மாடுகளை வண்டிகளில் பூட்டிக் கொண்டு வீதிகளில் ஊா்வலமாக வந்து மாட்டுப் பொங்கலை மகிழ்ச்சியுடன் கிராம மக்கள் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
‘என் இனிய தமிழ் மக்களே’! ஓய்ந்தது குரல்!

கிருஷ்ணகிரி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி

போதை ஊசி செலுத்திக்கொண்ட இளம் பெண் உயிரிழப்பு: காதலன், நண்பன் கைது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



