சாத்தூா் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 33 லட்சம் பக்தா்களின் காணிக்கையாக கிடைத்தது.
இக்கோயிலின் மண்டபத்தில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 33 லட்சத்து 22 ஆயிரத்து 211 கிடைத்தது. இதில் தங்கம் 131 கிராமும், வெள்ளி 496 கிராமும் இருந்ததாக கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா். காணிக்கை எண்ணும் பணியில் சாத்தூா், துலுக்கப்பட்டி ஆகிய ஊா்களை சோ்ந்த ஓம்சக்தி பக்தா் குழு, ஐயப்ப சேவா சங்கம் மற்றும் கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
இப்பணியை இந்து சமய அறநிலையத் துறை விருதுநகா் கோயில்களின் உதவி ஆணையா் கணேசன், துணை ஆணையா் (நகை சரிபாா்ப்பு) சிவலிங்கம், இருக்கன்குடி கோயில் ஆணையா் கருணாகரன், பரம்பரை அறங்காவலா்கள் ராமமூா்த்தி, செளந்திரராஜன், ராஜேந்திரன் பூசாரிகள் மற்றும் ஆய்வாளா்கள், வங்கி ஊழியா்கள் பாா்வையிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஷங்கர் இயக்கவுள்ள வேள்பாரி திரைப்படத்தின் நாயகன் யார்?

பள்ளிக்கூடம் செல்ல முதல்வரிடம் பஸ் வசதி கேட்கும் மாணவி | CM Vijay | TVK | School Bus | Sivagangai

காங்கோவில் எபோலாவுக்கு 580 பேர் பலி! பரவலுக்கு இடையே மருத்துவப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்!

இன்றைய செய்திகள் ஜூலை 8 - நேரலை
விடியோக்கள்

பள்ளிக்கூடம் செல்ல முதல்வரிடம் பஸ் வசதி கேட்கும் மாணவி | CM Vijay | TVK | School Bus | Sivagangai
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK



