குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

ஷங்கர் இயக்கவுள்ள வேள்பாரி திரைப்படத்தின் நாயகன் யார்?

வேள்பாரி திரைப்படத்தின் நாயகன் குறித்து...

News image
Updated On :8 ஜூலை 2026, 4:30 pm IST

இயக்குநர் ஷங்கர் இயக்கவுள்ள வேள்பாரி திரைப்படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருக்கிறது.

இயக்குநர் ஷங்கரின் இந்தியன் - 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூலில் தோல்வியடைந்தது. இதனால், ஒட்டுமொத்த படக்குழுவினரும் அதிருப்தியடைந்தனர்.

அடுத்ததாக, கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் - 3 படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இதில், ராம் சரண் நடிப்பில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படமும் தோல்வியையே சந்தித்தது. தொடர்ந்து, இயக்குநர் ஷங்கர் எழுத்தாளரும் எம்.பி.யுமான சு. வெங்கடேசன் எழுதிய, ’வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலைத் திரைப்படமாக்க திட்டமிட்டு அதற்கான எழுத்து பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு 2026, ஜூன் மாதம் துவங்கவுள்ளதாகக் கூறப்பட்டது. மேலும், இதில் நாயகனாக நடிகர் சூர்யா அல்லது தனுஷ் நடிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவித்தன.

ஆனால், நடிகர் சூர்யா தன் 48-வது திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், நடிகர் தனுஷும் ஓம் திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்திலும் அதனைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்திலும் நடிக்க உள்ளார்.

இதனால், இந்தாண்டு இருவரும் வெவ்வேறு இயக்குநர்களின் இயக்கத்தில் நடிப்பதால் வேள்பாரி திரைப்படத்தில் வேறு யார் நடிக்கப் போகிறார்? எனக் கேள்விகள் எழுந்துள்ளன.

No updates have been released regarding the movie Velpari, which is set to be directed by Shankar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.