இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இந்தியன் - 2, கேம் சேஞ்சர் படங்களின் தோல்வியால் பெரிய ஏமாற்றத்தில் இருக்கிறார். இரு படங்களும் எதிர்பார்த்த வணிக வெற்றியையும் நல்ல விமர்சனங்களையும் பெறாதாது ஷங்கருக்கு அதிருப்தியை அளித்துள்ளது.
அடுத்ததாக, ஷங்கர் வேள்பாரி நாவலை இயக்கும் முயற்சிகளில் இருக்கிறார். இதற்கிடையே, ஷங்கரின் மகன் அர்ஜித் இயக்குநராகும் விருப்பத்தில் இருந்ததால் அவரை ஏ. ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக ஷங்கர் சேர்த்துவிட்டார். அர்ஜித்தும் நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.
தற்போது, அர்ஜித் இயக்குநர் அட்லியின் உதவி இயக்குநர் இயக்கத்தில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்திற்கான பூஜை அண்மையில் நடைபெற்றுள்ளது. இதில், இயக்குநர்கள் ஏ. ஆர். முருகதாஸ், ஜேசன் சஞ்சய் உள்ளிட்டோர் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகவும் நாயகியாக கிருத்தி ஷெட்டியும் வில்லனாக அனுராக் காஷ்யப்பும் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Director Shankar's son Arjith is set to make his debut as a lead actor.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











