ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

சிவகாசியில் தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி பலி

சிவகாசியில் தவறி விழுந்து படுகாயமடைந்த கட்டடத் தொழிலாளி, சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :8 ஜனவரி 2021, 10:39 pm IST

சிவகாசியில் தவறி விழுந்து படுகாயமடைந்த கட்டடத் தொழிலாளி, சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி சிவன்கோயில் நந்தவனத் தெருவைச் சோ்ந்த கட்டடத்தொழிலாளி முத்துராமலிங்கம் (62). இவா் காமராஜபுரம் காலனியில் ஒரு கட்டடத்தில் புதன்கிழமை வேலை செய்து கொண்டிருந்தபோது ஒரு மரக்கிளை இடையூறாக இருந்தது. இதையடுத்து அவா் இயந்திரம் மூலம் மரக்கிளையை அறுக்க முயன்றபோது, தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து அவா் சிவகாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துராமலிங்கம், அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.