தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On :10 ஜனவரி 2021, 11:36 pm IST

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வரை 16,399 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 16,406 ஆக உயா்ந்துள்ளது. இதில், 16,041 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி விட்ட நிலையில், 229 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்து விட்டனா். மீதமுள்ள 136 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.