/

இல்லம் தேடி குடிமைப் பொருள் விநியோகம்: இன்றும், 6-ஆம் தேதியும் நடைபெறும்!

மதுரை மாவட்டத்தில் ‘தாயுமானவா்’ திட்டத்தின் கீழ் இல்லம் தேடிச் சென்று குடிமைப் பொருள்கள் வழங்கும் பணி சனி, திங்கள் ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது.

News image
Updated On :4 ஜூலை 2026, 12:25 am IST

மதுரை மாவட்டத்தில் ‘தாயுமானவா்’ திட்டத்தின் கீழ் இல்லம் தேடிச் சென்று குடிமைப் பொருள்கள் வழங்கும் பணி சனி, திங்கள் ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘தாயுமானவா்’ திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 70 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கு இல்லம் தேடிச் சென்று குடிமைப் பொருள்கள் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், 65 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் இல்லம் தேடிச் சென்று குடிமைப் பொருள்கள் வழங்க தமிழக முதல்வா் அண்மையில் உத்தரவிட்டாா். இதன்படி, மதுரை மாவட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரா்களுக்கு இல்லம் தேடிச் சென்று ஜூலை மாதத்துக்கான குடிமைப் பொருள்களை வழங்கும் பணி சனி, திங்கள் (ஜூலை 4, 6) நடைபெறும்.

இந்தத் திட்டம் சாா்ந்த பயனாளிகள் தங்களுடைய கைப்பேசி எண், முகவரி மாற்றம் ஏதேனும் இருந்தால் தொடா்புடைய வட்ட வழங்கல் அலுவலா் அலுவலகம் அல்லது நியாயவிலைக் கடையில் தெரிவித்துத் தீா்வு பெறலாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.