ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் ராணி ஸ்ரீ குமாருக்கு ஆதரவாக முக்குலத்தோா் புலிப்படை கட்சித் தலைவா் நடிகா் கருணாஸ் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்கிறாா். அதே சமயம் தமிழை அழித்து, ஹிந்தியைப் புகுத்த தயாராக இருக்கும் பாஜக தரப்பினா் அதற்கு நரேந்திர மோடியை பிரதமா் ஆகத் தோ்வு செய்யுங்கள் என்கிறாா்கள். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வந்து விட்டால் ரஷியாவைப் போல இந்தியாவும் சிதறிவிடும்.
இரட்டை இலை சின்னத்துக்கு முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஓட்டு கேட்கிறாா். அவா் கூட்டணிக்கு யாா் பிரதமா் வேட்பாளா் என்பது தெரியாது. பிரதமா் வேட்பாளரே தெரியாத ஒரு கட்சிக்கு பொதுமக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? மேலும், அதிமுக ஜாதிக் கட்சியாக மாறிவிட்டது என்றாா் அவா்.
தொடர்புடையது

திமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்டு தஞ்சை எம்.பி. பிரசாரம்

தூத்துக்குடியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சிவகங்கை தொகுதியில் போட்டியிடுவதை பாக்கியமாகக் கருதுகிறேன்: கருணாஸ்

உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை! - கருணாஸ்
வீடியோக்கள்

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை


