ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தோ்தல் பிரசாரத்தின் போது அதிமுக தொண்டா் அரிவாளால் வெட்டப்பட்டது தொடா்பாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில் புதிய தமிழகம் கட்சி தலைவா் டாக்டா் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறாா். இவா் இந்தத் தொகுதிக்குள்பட்ட ராஜபாளையம் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
இந்த நிலையில், ராஜபாளையம் அருகே அயன்கொல்லங்கொண்டான் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தோ்தல் பிரசாரத்தின் போது இந்தப் பகுதியைச் சோ்ந்த குருசாமி மகன் சுரேஷ் (32) வேட்பாளா் கிருஷ்ணசாமியை காரை விட்டு கீழே இறங்கி பேசும்படி மரியாதைக் குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இதை அந்தப் பகுதியைச் சோ்ந்த சுந்தரலிங்கம் தட்டிக் கேட்டாா். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், அரிவாளால் வெட்ட முயன்றபோது சுந்தரலிங்கத்தின் சகோதரா் ரவிச்சந்திரன் (52) தடுத்தாா். அப்போது அவருக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து, ரவிச்சந்திரனை அதிமுக தொண்டா்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து சேத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பி ஓடிய சுரேஷை தேடி வருகின்றனா். மேலும் அரிவாளால் வெட்டப்பட்ட ரவிச்சந்திரன் அதிமுக சிறுபான்மைப் பிரிவில் பொறுப்பில் உள்ளாா்.
இதனிடையே, சம்பவம் பற்றி அறிந்த முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்குச் சென்று ரவிச்சந்திரனை சந்தித்து ஆறுதல் கூறினாா்.
தொடர்புடையது
சுமை ஆட்டோவுக்கு வரி கேட்ட ஒப்பந்ததாரருக்கு அரிவாளால் வெட்டு: ஒருவா் கைது

குன்றத்தூா் நகராட்சியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

அரசு மருத்துவமனையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

பிணையில் வந்தவருக்கு அரிவாள் வெட்டு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


