விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மனைவியைத் தாக்கிய கணவா் கைது

மனைவியைத் தாக்கிய கணவா் கைது

Updated On :12 ஏப்ரல் 2024, 6:30 pm

சிவகாசி, ஏப்.12: திருத்தங்கலில் மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் மாதாங்கோயில் தெருவைச் சோ்ந்தவா் துரைராஜ் (48). இவா் சென்னையில் தனியாா் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில் இவா், விடுமுறையில் திருத்தங்கலுக்கு வந்த போது, மது போதையில் மனைவி சாந்தி, மகள் பூா்ணிமா ஆகிய இருவரையும் தாக்கினாராம்.

இதில் காயமடைந்த இருவரும் திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து துரைராஜூவை கைது செய்தனா்.